இது தளபதி தீபாவளி.. பக்குவமா சொல்லும் போதே கேட்டுக்கோங்க செல்லம்.. மாஸ்டர் டீசர் வருது!

சென்னை: தளபதி ரசிகர்கள் ரொம்ப நாளா வெறித்தனமாக வெயிட் பண்ணிட்டு இருந்த மாஸ்டர் படத்தின் டீசர் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது என்கிற மாஸ் அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்பொது வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காகவும், அதன் அடுத்த அப்டேட்டுக்காகவும் மிகவும் காத்திருந்தனர்.

இந்நிலையில், தீபாவளிக்கு சரவெடியாய் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

தளபதியின் மாஸ்டர்

தளபதியின் மாஸ்டர்

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், செளந்தர்யா, விஜே ரம்யா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து பணியாற்றியுள்ள படம் மாஸ்டர்.

மாஸ்டர் தீபாவளி

கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போனது. தியேட்டரில் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக விஜய் இருந்ததால் தான் இந்த தாமதம். லேட்டா வந்தாலும் வாத்தியார் லேட்டஸ்ட்டா வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே தீபாவளிக்கு மாஸ்டர் டீசர் வெளியாகிறது.

பிப்., 14 டு நவ., 14

பிப்., 14 டு நவ., 14

காதலர் தினம் குழந்தைகள் தினம் கிழமை ஒற்றுமை குறித்த ஜோக் போல, காதலர் தினத்திற்கு குட்டி ஸ்டோரி பாட்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தீபாவளியும் குழந்தைகள் தினமும் ஒன்றாக வருவதால், மாஸ்டர் டீசரும் நவம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது கூடுதல் சிறப்பு.

ஆரம்பிக்கலாங்களா

உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டைட்டில் டீசரில் இடம்பெற்ற அந்த ஆரம்பிக்கலாங்களா என்கிற வசனம் டிரெண்டாகி வருகிறது. பழைய டீசர் ரெக்கார்டுகளுக்கெல்லாம் வேட்டு வைக்க ஆரம்பிக்கலாங்களா என தளபதி படை இப்போதே கிளம்பி விட்டது.

போடுறா வெடிய

கடந்த ஆண்டு தீபாவளி பிகில் தீபாவளியாக களைகட்டியது. இந்த ஆண்டு மாஸ்டர் தீபாவளியாக கலக்கப் போகிறது என ரசிகர்கள், போடுறா வெடிய என தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசை எல்லாம் இப்பவே போட்டு வெடிக்க ஆரம்பித்து வருகின்றனர். தீபாவளி சாய்ங்காலத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க!

Recommended Video

Master Teaser Record Breaking • Trending in 9 Countries | Thalapathy Vijay
அந்த விமர்சனம்

அந்த விமர்சனம்

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் இப்ப உடனே இப்படி ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது என அஜித் ரசிகர்கள் கலாய்த்தும் விமர்சனங்களை வைத்தும் வருகின்றனர். அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் ட்வீட்களை போட்டு ட்விட்டர் சண்டையும் சைடு கேப்பில் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X