Ponniyin Selvan Release Date: பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை.. பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி இதோ!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் இந்த ஆண்டே வெளியாகாதா? இன்னமும் புரமோஷன் பணியை மணிரத்னம் மற்றும் லைகா ஆரம்பிக்கவில்லையே என நினைத்த நிலையில், அதிரடியாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Recommended Video
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் காவியத் திரைப்படமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிஜி பணிகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகும் என ஏகப்பட்ட பேச்சுக்கள் வெளியான நிலையில், திடீரென இப்படியொரு அறிவிப்பை கொடுத்து திகைக்க வைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

சொன்ன சொல் தவறமாட்டான் சோழன்
சொன்ன சொல் தவறமாட்டான் சோழன் என்பதை நிரூபிக்கும் வகையில் முன்னதாக அறிவிக்கப்பட்ட அதே செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரைக்கு வருகிறது என்கிற அறிவிப்பை இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தற்போது வெளியிட்டு தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நமக்கு ஒரு பாகுபலி
கர்ணன், அரச கட்டளை என வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தான் அதிகமாக வந்த நிலையில், அப்படியொரு படம் தமிழ் சினிமாவில் இப்போ வரவேண்டும் என்றும், பாகுபலி படத்தை பார்த்த பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், அந்த குறையை போக்க இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள நம் மண்ணின் கதையான பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் இறுதியில் வெளியாகி உலகளவில் வெற்றியை காண வேண்டும் என ரசிகர்கள் அதன் பிரம்மாண்ட மேக்கிங்கை காண காத்திருக்கின்றனர்.

ரியல் நடிப்பு ராட்சதர்கள்
சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நாசர், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள பிரம்மாண்ட காவிய படமான பொன்னியின் செல்வன் எப்படி இருக்கப் போகிறது என்றும் விரைவில் வெளியாக உள்ள அதன் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளை காணவும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
தள்ளி போகல
செப்டம்பர் 30ம் தேதி என படத்தின் ரிலீஸ் தேதி லாக் செய்யப்பட்ட நிலையில், ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. அதற்கு ஏற்றார் போல படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தள்ளிப் போன நிலையில், படம் வெளியாக தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து சிஜி பணிகளையும் அசுர வேகத்தில் முடித்து பொன்னியின் செல்வனை ரசிகர்களுக்கு சொன்ன தேதியில் கொடுக்க கடும் உழைப்பை போட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். முதல் பாகத்தின் வெற்றி தான் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் என்பதால், இந்த படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











