Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மெகா பிரேக்கிங்.. அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான்.. பூஜாவும் இல்லை.. ராஷ்மிகாவும் இல்லை!
சென்னை: ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள அருவ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
#askraashi என்ற கேள்வி பதில் விளையாட்டை ஆரம்பித்து வைத்த நடிகை ராஷி கன்னாவிடம், அடுத்ததாக யாருடன் நடிக்கிறீர்கள், என்ன படம் என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பினர்.
அரண்மணை 3ம் பாகத்தில் ராஷி கன்னா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அந்த படத்துடன் கூடவே சூர்யாவின் அருவா படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சினிமா, டிவி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி வேண்டும்.. தமிழக முதல்வரிடம் பெப்சி கோரிக்கை!
சூர்யாவின் அருவா
இந்த கொரோனா கலவரம் இல்லையென்றால், கடந்த மாதம் ஷூட்டிங் தொடங்கி, வரும் தீபாவளிக்கு அருவாவை படையலாக போட்டிருப்பார் நடிகர் சூர்யா. ஹரி இயக்கத்தில் வேல், சிங்கம் 1,2,3 என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள சூர்யா மீண்டும் அவருடன் இணைந்துள்ள படம் தான் அருவா.
பூஜா ஹெக்டே
அருவா படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் எழுந்து நின்றது. ஆனால், படக்குழு சார்பில் இதுவரை அதனை அறிவிக்கவில்லை. அலா வைகுந்தபுறமுலோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தான் ஜோடி என்ற தகவலும் வைரலாக பரவியது.
நான் இல்லை
ஆனால், சூர்யாவின் அருவா படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என்றும், இரண்டு தமிழ் படங்களில் நடிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், ஆனால், எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என நடிகை பூஜா ஹெக்டே அருவா படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா
பூஜா ஹெக்டே போனால் என்ன இருக்கவே இருக்காங்க நம்ம ராஷ்மிகா மந்தனா, ஏற்கனவே தம்பி கார்த்தி படத்தில் அவருக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிச்சுட்டு வராங்க, அவங்க தான் நம்ம ஹீரோ சூர்யாவுக்கு ஜோடி என ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், அதுகுறித்தும் படக்குழு எந்தவொரு அறிவிப்பையும் வெளிப்படுத்த வில்லை.
அருவா ஹீரோயின்
இந்நிலையில், #askraashiவில் தனது ரசிகர்களுக்கு பதில் அளித்து வந்த நடிகை ராஷி கன்னா, அந்த மெகா பிரேக்கிங்கை சத்தமில்லாமல் ஓப்பன் செய்து விட்டார். ஒருவேளை இதனை அறிவிக்கத் தான் இந்த கேள்வி, பதில் செஷனே நடத்தப்பட்டதா? என்பதும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகமாகவே இருக்கிறது.
சூர்யா ரசிகர்கள் வாழ்த்துக்கள்
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ராஷி கன்னா, தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் படு பிசியாக நடித்து வரும் ராஷி கன்னாவுக்கு சூர்யாவுடன் நடிக்கும் ராஜயோகம் கிடைத்ததை அவரது ரசிகர்கள் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!