பிரம்மாண்ட பிரேக்கிங்: ராஜமெளலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: தெலுங்கு நடிகர் ராம்சரணை இயக்குநர் ஷங்கர் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ராம்சரணை அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கப் போகும் அறிவிப்பு இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
மேலும், முதன்முறையாக வரலாற்று திரைப்படமாக இந்த படத்தை ஷங்கர் உருவாக்க உள்ளாராம்.

பிரம்மாண்ட பிரேக்கிங்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ராம்சரண் உடன் இணைந்து புதிய படத்தை உருவாக்க உள்ளேன் என்றும் அந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒட்டுமொத்த உலகத்துக்கும் பிரம்மாண்ட பிரேக்கிங்கை கொடுத்துள்ளார்.

வரலாற்று படம்
பாகுபலியை போல இந்த படம் வரலாற்று படமாக மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப் பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்திரன், 2.0 என டெக்னாலாஜி படங்களையும், இந்தியன், முதல்வன், அந்நியன், இந்தியன் 2 என சமூக கருத்துள்ள படங்களையும் இயக்கிய ஷங்கர் முதன்முறையாக ஹிஸ்டாரிக் படத்தை இயக்கவுள்ளது வேற லெவல் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

டோலிவுட் ஹீரோ ஏன்
இதுவரை கோலிவுட் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர் முதன் முறையாக டோலிவுட் ஹீரோவை வைத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை இயக்கப் போவது ஏன் என்கிற கேள்வியும் விமர்சனங்களும் கூடவே எழுந்துள்ளன. ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ராம்சரண் பான் இந்திய நடிகராக மாறியதன் விளைவாகவே ஷங்கர் அவரை இயக்க முடிவு செய்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

மாவீரன்
ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மகதீரா தமிழில் மாவீரன் எனும் பெயரில் டப் செய்யப்பட்டே மிகப்பெரிய வெற்றியை இங்கே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்த்தலம் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்திய நடிகர்கள்
ராம் சரண் லீடு ரோலில் நடித்தாலும், தமிழ், இந்தி, கன்னட, மலையாளம் மொழியில் உள்ள முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெறுவார் என்றும் கேஜிஎஃப் நாயகன் யஷ்ஷுக்கும் படத்தில் முக்கிய ரோல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிச்சயம் ஷங்கரின் இந்த படம் பாகுபலியை போலவே உலகையே திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது என்கின்றனர்.
பட்ஜெட் ட்ரோல்
ஆயிரம் கோடியா? இரண்டாயிரம் கோடியா? இந்த படத்தின் பட்ஜெட் என்றும், சிவாஜி படத்தில் வீட்டையும் சொத்தையும் ரஜினிகாந்த் அடகு வைக்கும் காட்சிகளை போட்டு, தயாரிப்பாளர் தில் ராஜுவை டோலிவுட் ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர். இப்போதைக்கு படம் குறித்த மற்ற எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 அவ்ளோதானா?
இந்தியன் 2 படத்தை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த இயக்குநர் ஷங்கரும் தற்போது, டோலிவுட் தயாரிப்பாளர், டோலிவுட் ஹீரோ என தனது அடுத்த படத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்தியன் 2 படம் இறுதிகட்ட ஷூட்டிங்கை முடித்து எப்போ வரும் என்பதும் தெரியவில்லை. காத்திருப்போம்!


Click it and Unblock the Notifications











