வெறித்தனம்.. தளபதி 66 படத்தை இயக்கப்போவது இவர்தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சென்னை: தளபதி 66 படத்தை இயக்குநர் வம்சி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எந்தவொரு அப்டேட்டும் கேட்டு காத்திருக்காத நிலையிலேயே தளபதி ரசிகர்களுக்கு சன் டே ஸ்பெஷலாக இப்படியொரு அதிரடியான அப்டேட் கிடைத்துள்ளது.
கார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் வெளியான தோழா, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றிப்படங்களை இவர் இயக்கி உள்ளார்.

இறுதிக்கட்டத்தில் பீஸ்ட்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜார்ஜியா, சென்னை, டெல்லி என படப்பிடிப்பு தீயாய் நடைபெற்று வரும் நிலையில், வரும் நவம்பர் மாதம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தளபதி 66
பீஸ்ட் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தளபதி விஜய்யை அடுத்ததாக இயக்கப் போவது யாரு? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி தான் தளபதி 66 படத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்து விட்டார்.

தெலுங்கு இயக்குநர்
தமிழ் இயக்குநர்களுடன் கைகோர்த்து பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநருடன் தனது 66வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். இயக்குநர் வம்சியின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் தில் ராஜு, ஷிரிஷ் உள்ளிட்டோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

சைமா விருது விழாவில்
சமீபத்தில் தென்னிந்திய சைமா விருது விழாவில் வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த மகரிஷி திரைப்படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் குவிந்தன. அந்த விழாவில் இயக்குநர் வம்சியை மடக்கி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அடுத்த படம் யாருடன் சார்? என கேள்வி எழுப்ப சிரித்துக் கொண்டே விரைவில் அறிவிக்கிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தளபதி ரசிகர்களுக்கு சன் டே ட்ரீட்டாக தளபதி 66 அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

பான் இந்தியா படம்
தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி படமாக உருவாக உள்ள தளபதி 66 மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகப் போகிறது. தொடர்ந்து, தெலுங்கு மொழி திரைப்படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றியடைந்து வரும் நிலையில், விஜய்யின் மார்க்கெட்டும் இந்தியளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











