twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உக்கிரமாகும் கொரோனா.. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் நிறுத்தம்!

    |

    சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

    என்னாது.. நானா.. இது மட்டும்தானா.. வேற ஏதும் இல்லையா.. ரம்யா பாண்டியன் தம்பி பரபர கேள்வி!என்னாது.. நானா.. இது மட்டும்தானா.. வேற ஏதும் இல்லையா.. ரம்யா பாண்டியன் தம்பி பரபர கேள்வி!

    பல்வேறு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தபோதும் கொரோனா பரவலின் தீவிரம் குறைந்தபாடில்லை.

    இனி வரும் நாட்களில்

    இனி வரும் நாட்களில்

    சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் கோரத்தாண்டவம் வரும் நாட்களில் உச்சத்தில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    சூர்யா படம் நிறுத்தம்

    சூர்யா படம் நிறுத்தம்

    இதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது மகனுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு லாக்டவுன்

    கடந்த ஆண்டு லாக்டவுன்

    கடந்த ஆண்டு கொரோன காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இந்திய சினிமாத் துறை பேரிழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Big budget movies shooting has been stopped due to Covid 19. Suriya, Vikram and Sivakarthikeyan's movies are stopped.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X