இந்தியன் 2 தயாரிப்பாளர் மாறுகிறார்... ஹீரோவும் மாறுகிறார்..?
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் இந்தியன் 2 படம் நடிக்கிறார் என்ற செய்தி அண்மையில் பிக் பாஸ் மேடையில் வைத்து அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. தில் ராஜுவும் மேடையில் தோன்றி கமலுக்கும் ஷங்கருக்கும் பூங்கொத்து கொடுத்தார்.

இடையில் என்ன நடந்ததென்று தெரியவில்லை. இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர் திடீரென்று மாறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தில் ராஜுவுக்கு பதில் ஒரு மெகா நிறுவனம் தயாரிப்பைக் கையிலெடுத்துள்ளதாம்.
அதே போல ஹீரோவும் மாறக்கூடும் என்கிறார்கள். இதுகுறித்து சூப்பர் ஸ்டாரிடம் பேச்சு நடத்தியிருக்கிறது அந்த பெரிய நிறுவனம். அவர் மறுத்துவிட்டதால், ஷங்கர் நீண்ட நாட்களாக இயக்கக் காத்திருக்கும் இன்னொரு டாப் நடிகருடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications