வொர்ஸ்ட் பர்ஃபார்மர் தேர்வு.. பிக் பாஸ் வீட்டில் வெடித்தது பிரளயம்.. கமல் பஞ்சாயத்து பண்ண வேண்டாமா?

சென்னை: ஃப்ரீஸ் டாஸ்க் காரணமாக இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீடு ரொம்பவே ஹேப்பியாக சென்றது.

அதற்கு ஆப்பு வைக்க களமிறங்கிய நம்பியார் பிக் பாஸ் இந்த வாரம் ஈடுபாடு குறைவான போட்டியாளரை தேர்வு செய்யுங்க என்று சொன்னார்.

இந்த வார கேப்டனாக இருக்கும் ஆரியையும் பாலாவையும் ஹவுஸ்மேட்கள் தேர்வு செய்தது பிக் பாஸ் வீட்டில் பிரளயத்தையே கொண்டு வந்து விட்டது.

காது வலிக்குது

காது வலிக்குது

உண்மையில் இப்படி எல்லாம் வெளியே யாராவது பேசினால், நடப்பதே வேற, கைகலப்பு இல்லாமல் கத்தி கத்தி பேசுவதால் அவங்க வாய் வலிக்குதோ இல்லையோ நம்ம காது ரொம்பவே வலிக்குது. பாலா தம்பி கொஞ்சம் வால்யூமை குறைங்க ஏதோ எங்க வீட்ல சண்டை நடப்பது போல இருக்கு என நெட்டிசன்கள் நொங்கெடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை சனியன்

சனிக்கிழமை சனியன்

ஆரி மற்றும் பாலாவிடம் ஏதாவது பண்ணுங்கப்பா சனிக்கிழமை எபிசோடுக்கு கன்டென்ட்டே இல்லை என சொல்லி இருப்பார் போல தெரிகிறது பிக்பாஸ். இருவரும் களத்தில் இறங்கி அடித்துக் கொள்ளாத குறையாக திட்டிக் கொண்டனர். ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களும், இவங்க சண்டையை ரசிச்சி பார்க்குறாங்க. இவங்கள போய் வொர்ஸ்ட் பர்ஃபார்மர்னா எப்படி?

அன்பு கேங் தாக்கம்

அன்பு கேங் தாக்கம்

அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் வெளியேறிய நிலையிலும் இன்னமும் அன்பு கேங்கின் தாக்கம் அப்படியே இருக்கிறது. ஆரியையும் பாலாவையும் டார்கெட் பண்ணி சரியா நாமினேட் பண்ணி ஜெயிலுக்குள் அனுப்புறாங்க, இந்த கேமை விளையாடாதீங்கன்னு தான் ஆரி ரியோவுக்கு சொல்கிறார்.

பிக்பாஸ் பிரளயம்

பிக்பாஸ் பிரளயம்

பாலாவுக்கும் ஆரிக்கும், ரியோவுக்கும் ஆரிக்கும் என இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் ஒரு பெரிய பிரளயமே வெடித்து சிதறியது. ஆரி டா போடக் கூடாதுன்னு சொல்லிட்டு, பாலா வார்த்தைக்கு வார்த்தை ஒருமையில் பேசுவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதுமாக செயல்பட்டது எரிச்சலை கிளப்பியது.

ஜவ்வு போல

ஜவ்வு போல

அதே போல ஆரிக்கு பாலா மற்றும் ரியோவிடம் இது பற்றி பேசினால் பிரச்சனை வரும் என்று தெரிந்தே மறுபடி மறுபடியும் அதே வார்த்தைகளை ஜவ்வு போல இழுத்து பேசுவதும் கடுப்பை கிளப்புகிறது. பாலாவிடம் அப்படி பேசினால் தன்னுடைய மரியாதை கெட்டுப் போகும் என்பதை அவர் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் என்றும், பாலாவை பற்ற வைக்க கொளுத்திப் போடுகிறாரா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுகிறது.

பஞ்சாயத்து பண்ணனும்ல

பஞ்சாயத்து பண்ணனும்ல

இந்த வாரம் ஷிவானி அம்மா பேசியது மட்டுமே வைத்துக் கொண்டு கமல் எப்படி சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளை கடத்த முடியும். ஹவுஸ்மேட்களுக்கு பஞ்சாயத்து பண்ண வேண்டாமா? பைனல்ஸை நெருங்குவதால் பிரச்சனையை விட பிரளயத்தை பண்ணுங்க என டாக் பேக்கில் சொல்றாங்களோ என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X