twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் அடிதடி: எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீர் வெளிநடப்பு

    By Shankar
    |

    S A Chandrasekaran
    சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் அடிதடி ரகளை நடந்தது. இதனால் சங்கத்தின் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன் திடீரென வெளிநடப்பு செய்தார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் தற்காலிக தலைவராக உள்ளார். துணைத் தலைவராக அன்பாலயா கே.பிரபாகரனும், செயலாளராக கே.முரளிதரனும், பொறுப்பு செயலாளராக கதிரேசனும், பொருளாளராக காஜாமைதீனும் உள்ளனர்.

    சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, வருகிற 28 ந் தேதி பொதுக்குழுவை கூட்டுவது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடந்தது. பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

    கூட்டத்தில், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு தரப்பினர், பொதுக் குழுவை கூட்டித்தான் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றார்கள். அன்பாலயா கே.பிரபாகரன் தலைமையில் இன்னொரு தரப்பினர், பொதுக் குழுவை கூட்டக் கூடாது, நேரடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றார்கள்.

    அடிதடி...

    இதுதொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கூட்டத்தில் அடிதடி நடந்தது. ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் தலையிட்டு, சமரசம் செய்தார்கள். அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீரென்று கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று 194 பட அதிபர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். கடந்த 20 ந் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஆகஸ்டு 28 ந் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று 130 பட அதிபர்கள் கையெழுத்திட்டு இருப்பதாக அன்பாலயா கே.பிரபாகரன், கே.முரளிதரன், டி.சிவா, சீனிவாசன் ஆகியோர் கூறுகிறார்கள். அவர்களாகத்தான் என்னை பொறுப்பு தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இப்போது, தெரியாமல் தேர்ந்தெடுத்து விட்டோம் என்கிறார்கள். பொதுக்குழுவை கூட்டுவதற்கு இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? என்றார்.

    இந்த பிரச்சினை தொடர்பாக அன்பாலயா கே.பிரபாகரன் கூறுகையில், "பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று 60 பேர்கள்தான் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதில், பல பேர் கையெழுத்துகள் போலியானவை. பொதுக்குழுவை கூட்டாமல், நேரடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று 144 பேர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

    இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில், பெரும்பான்மையானவர்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். தலைவர் வெளிநடப்பு செய்ததால், முடிவு எடுக்க முடியாமல் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    செயற்குழு கூட்டத்திலேயே அடிதடி நடக்கிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டினால் என்ன நடக்கும். அதனால்தான் வேண்டாம் எனகிறோம்," என்றார்.

    English summary
    The executive committee meeting of Tamil Film Producer Council has been ended with a violent note. A faction of producers headed by Anbalaya Prabhakaran demanded the election for the council without convening the General body. But the President In Charge, SA Chandrasekaran urged to convene the body with in a time frame to decide the election date. This is the reason behind the clashes in the council.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X