ஆரி பேசும்போது குறுக்கே பேசிய ரம்யா.. இதுக்குத்தான் இதை கொடுக்கிறேன் என சொன்ன ஆரி.. செம கிளாஷ்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ மிகவும் தாமதமாக வந்தது. 9 மணிக்கு வரவேண்டிய புரமோ 10 மணிக்கு வந்தது.
மீண்டும் புரமோவில் ஆரியை தேடி கண்டு பிடித்து பிக் பாஸ் எடிட்டர் காட்டி உள்ளார்.
இந்த புரமோவில் ரம்யா பாண்டியனுக்கும் ஆரிக்கும் கிளாஷ் ஆகியுள்ளது.

ஆரி போபியா
பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆரி போபியா வந்து விட்டது என்று தான் தோன்றுகிறது. அதிலும், குறிப்பாக ரம்யா பாண்டியனுக்கு அதிகளவில் ஆரி போபியா வந்து விட்டது. ஆரம்பத்தில் இருந்தே பாலாஜியை போல இவருக்கும் ஆரி மேல வெறுப்பு உருவாகியது தான் இதற்கு காரணம்.

சிரிப்பு மாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ரம்யா பாண்டியனுக்கு சாஃப்ட் ஹர்ட் என்கிற பெயர் வைக்கப்பட்டது. ஆனால், ஆரி விஷயத்தில் மட்டும் அவர் ஹர்ட் பண்ணும் விதமே வேற மாதிரி ஒன் சைடட் ஆக இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிரிப்பு மாஸ்க்கை போட்டு இதுவரை வலம் வந்த ரம்யாவுக்கு இந்த வாரம் வெளியேறிடுவேனோ என்கிற பயம் வந்து விட்டது.

லீடிங்கில் இல்லை
கடந்த வாரமே ஆஜீத்துடன் பெட்டி தூக்கும் நிலை வந்தது ரம்யாவுக்கு, இந்நிலையில், இந்த வாரமும் நாமினேஷனில் இருப்பதால், டிக்கெட் டு ஃபினாலே ஜெயிக்க வேண்டும் என ஆரம்பத்தில் கடுமையாக போராடினார். ஆனால், தொடர்ந்து வைக்கப்பட்ட பிசிக்கல் டாஸ்க் மற்றும் பேச்சு டாஸ்க்குகளில் அவரால் அதிக புள்ளிகளை பெற்று லீடிங்கில் வர முடியவில்லை.

அலாவுதீன் பூதம் போல
எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியே அனுப்பிவிட்டு, ஆஜீத்துக்கு அலாவுதீன் பூதமான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ரம்யா பாண்டியன் பெற்றுத் தந்தார். ஆனால், இந்த வாரம் அவர் எவிக்ஷனில் இருந்து தப்பிக்க அவருக்கு டிக்கெட் டு ஃபினாலேவும் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது.

குறுக்கிட்ட ரம்யா
இன்றைய முதல் புரமோவில் மீண்டும் அந்த வாசகம் கொடுக்கும் டாஸ்க் தொடர்ந்தது. ஆரி, ரம்யாவுக்கு ஒரு வாசகத்தை கொடுத்து சேஃப் கேம் ஆடுறாங்க என்றார். உடனே குறுக்கிட்டு பேசிய ரம்யா, சேஃப் கேம் சொல்லல, ஒன் சைடட்னு சொன்னேன் என்றார். இதுக்குத்தான் இதை கொடுக்கிறேன், நீங்க பேசும் போதும், மற்றவர்கள் பேசும் போது அமைதியாக இருந்தது போல, நீங்களும் அமைதியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என வெளுத்து விட்டார்.
Recommended Video

வெள்ளிக்கிழமை சண்டை
இன்றைக்கும் ஆரியை தான் போரிங் போட்டியாளர் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், வெள்ளிக்கிழமை ஷோ என்பதால், நிச்சயம் கடந்த வாரம் வெடித்ததை போலவே இன்னொரு பெரிய சண்டை பிக் பாஸ் வீட்டுக்குள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அடுத்த புரமோக்களுக்கும் இன்றைய ஷோவுக்கும் ரசிகர்கள் வெயிட்டிங்!


Click it and Unblock the Notifications











