கனவு நிறைவேறியது...நீண்ட காலம் காத்திருந்து சுசீலாவை சந்தித்த விக்ரம்
சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் சியான் விக்ரம். இவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படம் விக்ரம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். அதோடு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் முக்கிய ரோலில் நடித்த முடித்துள்ளார்.

காத்திருந்த விக்ரம்
லட்சக்கணக்கான ரசிகர்கள், விக்ரமை சந்திக்க வாய்ப்புக் கிடைக்காதா என காத்திருக்கின்றனர். ஆனால் விக்ரமிற்கோ, தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஒருவரை சந்திக்க வேண்டும் என்பது விக்ரமின் நீண்ட நாள் கனவாம். அது வேறு யாருமில்லை. பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தான்.

விக்ரமின் கனவு
சுசீலாவை ஒருமுறையாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதா என விக்ரம் காத்திருந்தாராம். ஒரு வழியாக தற்போது விக்ரமின் கனவு, நினைவாகி உள்ளது. சமீபத்தில் சுசீலாவை சந்தித்த விக்ரம், அந்த ஃபோட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். சுசீலாவை சந்தித்த விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சுசீலாவின் தீவிர ரசிகர்
விக்ரம் தனது பதிவில், கடந்த அக்டோபர் மாதம் பி.சுசீலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளார் விக்ரம். அன்று மாலையே சுசீலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் விக்ரம் . சுசீலாவின் மிக தீவிர ரசிகர் என தன்னை குறிப்பிட்டுள்ள விக்ரம், அதை சுசீலாவிடமும் நேரடியாக சொல்லி உள்ளார் விக்ரம்.

அசந்து போன மேனேஜர்
விக்ரமின் இந்த பணிவு, பி.சுசீலாவிடம் அவர் காட்டும் பாசத்தை பார்த்து சுசீலாவின் மேனேஜர் அசந்து போய் விட்டாராம். விக்ரமை பார்ப்பதற்காக சுசீலா ஒதுக்கிய நேரத்தை விட 10 நிமிடங்களுக்கு முன்பே விக்ரம், அங்கு போய் விட்டாராம். மிகவும் பதற்றமாக இருந்தாராம்.

நிறைவேறிய கனவு
கிட்டதட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சுசீலாவுடன் பேசினாராம் விக்ரம். மற்ற வேலைகள் காரணமாக விக்ரமிற்கு ஃபோன் வந்ததால், வேறு வழியில்லாமலும், பிரிய மனம் இல்லாமலும் அங்கிருந்து கிளம்பி சென்றாராம் விக்ரம். இருந்தாலும் விக்ரம் மிகவும் சந்தோஷத்துடன் இருந்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் தான் மீண்டும் வருவதாக வாக்குறுதி அளித்து சென்றுள்ளார் விக்ரம்.


Click it and Unblock the Notifications











