நடிகை சன்னி லியோன் படப்பிடிப்பில் திடீர் சண்டை.. இயக்குனர் அதிர்ச்சி.. படப்பிடிப்பு ரத்து!

By

மும்பை: நடிகை சன்னி லியோன் கலந்துகொண்ட படப்பிடிப்பில் திடீர் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை சன்னி லியோன், இந்தியில் அனாமிகா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இதை பிரபல இந்திப் பட இயக்குனர் விக்ரம் படம் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் மும்பை அருகே நடந்து வருகிறது.

ஸ்டன்ட் இயக்குனர்

ஸ்டன்ட் இயக்குனர்

சில நாட்களுக்கு முன் சன்னி லியோன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது ஸ்டன்ட் யூனியனை சேர்ந்த சிலர் செட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பிரபல ஸ்டன்ட் இயக்குனர் அப்பாஸ் அலி மொகுலுக்கு கொடுக்க வேண்டிய ரூ.38 லட்சத்தை கொடுக்குமாறு விக்ரம் பட்டிடம் கேட்டனர்.

ஷூட்டிங் நின்றது

ஷூட்டிங் நின்றது

இதனால் படப்பிடிப்பு தடைபட்டு பரபரப்பானது. இதையடுத்து அவர், நடிகை சன்னி லியோனை பத்திரமாக கேரவனுக்குள் அழைத்து சென்றுவிட்டார். பிறகு அவர்களிடம், காசோலை தருகிறேன் என்று இயக்குனர் சொன்னார். அதை வாங்குவதற்கு சிலர் வந்தனர். அதற்குள் லைட் இல்லை என்பதால் ஷூட்டிங் நின்றது.

அதிர்ச்சி அடைந்தேன்

அதிர்ச்சி அடைந்தேன்

இதுபற்றி விக்ரம் பட் கூறும்போது, சிலர் திடீரென்று செட்டுக்குள் புகுந்து இப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனடியாக சன்னி லியோனை, பத்திரமாக கேரவனுக்குள் அனுப்பிவிட்டேன். ஸ்டன்ட் இயக்குனர் அப்பாஸ் அலிக்கு நான் கொடுக்க வேண்டியது 13 - 14 லட்சம் ரூபாய்தான்.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

ஆனால், அவர்கள் ரூ.38 லட்சம் என்கிறார்கள். இதனால் காசோலையை போட்டோ எடுத்து அவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் இல்லை. செட்டுக்கு ஆட்கள் வருவார்கள் என்று ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து, தகவல் கூட தெரிவிக்கவில்லை. படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டதை ஏற்க முடியாது' என்றார்.

பாலிவுட் பரபரப்பு

பாலிவுட் பரபரப்பு

இந்நிலையில், ஸ்டன்ட் இயக்குனர் அப்பாஸ் அலியிடம் இதுபற்றி கேட்டபோது, அதை ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கம் பார்த்துக் கொள்ளும் என்றார். இதற்கிடையே, இயக்குனர் விக்ரம் பட, அவர் மீது வழக்குத் தொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சன்னி லியோன் கலந்துகொண்ட படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X