Idly Kadai: இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து.. ஒரு மணி நேரத்திற்கு மேலாக எரியும் தீ!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது. இதற்காக படக்குழு தரப்பில் செட் போடப்பட்டது. இந்த செட்டில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதன் பின்னர், படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக அடிப்பதால் தீ சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்து விட்டு எரிகிறது எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Big Fire Accident At Dhanush Idly Kadai Movie Shooting Spot

தனுஷ் இயக்கி அதில் தனுஷ், நிதயா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் முதலில் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் ஆனதால் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி மாறிப் போனது. தொடக்கத்தில் தேதி எதுவும் குறிப்பிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு மாற்றி வைத்தனர். இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ளார்கள்.

இட்லி கடை படத்தைப் பொறுத்தவரை பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் படம். ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை வரும் ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் கிட்டத்தட்ட மூன்று படங்கள் அதிகபட்சமாக ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், இவரது இயக்கத்தில் ஏற்கனவே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியான நிலையில், இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் வெளியானால் இந்த ஆண்டிலேயே இவரது இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படமாக இது இருக்கும்.

ஜூன் மாதம் வெளியாகவுள்ள குபேரா படத்தின் முதல் பாடல் நாளை அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில்தான் இட்லி கடை படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இட்லி கடை படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு தேனியில்தான் நடைபெற்றது. இதற்காக தேனியில் மிகப்பெரிய செட் போடப்பட்டது. இங்கு சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக அடிப்பதால் தீ சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்து விட்டு எரிகிறது எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X