பெரிய ஹீரோக்கள் சில்க் ஸ்மிதாவை உடல் ரீதியாக நாசமாக்கினர்: யாரை சொல்கிறார் ஸ்ரீரெட்டி?
சென்னை: நடிகர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் சில்க் ஸ்மிதாவை சீரழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி.
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலகில் புயலை கிளப்பிவிட்டுவிட்டு சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் யார் மீதாவது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் கவனம் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பக்கம் சென்றுள்ளது.
ஸ்ரீரெட்டி
சில்க் ஸ்மிதா பற்றி ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்கள் அவரை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள்..அத்தகைய சைக்கோக்களை எப்படி லெஜண்டுகள் என்று அழைக்க முடியும்..சினிமா அரசியலால் அவரை இழந்துவிட்டோம்..அவர் ஒரு லெஜண்ட் நடிகை...உங்களை மறக்க மாட்டோம் சில்க் ஸ்மிதா மேடம் என்று தெரிவித்துள்ளார்.

பொய்
ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த சிலர் அவர் சொல்வது உண்மையாக இருக்கும், ஆனால் அந்த பெரிய ஹீரோக்களின் பெயர்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். சிலரோ இந்த ஸ்ரீரெட்டிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார்கள்.

கடன்
17 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா கடன் தொல்லையாலும், காதல் தோல்வியாலும் மனமுடைந்து 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் வாழ்க்கை வரலாறு தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக்கப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

டர்ட்டி பிக்சர்
டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததன் மூலம் வித்யா பாலனுக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. அவர் கெரியரில் மறக்க முடியாத படமாக அது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











