அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் ராஷ்மிகா மந்தனா காதலர்.. புஷ்பா 3 படம் வேற வருதா? எண்டே கிடையாதா?

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இன்னமும் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் குறிப்பாக மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் இன்னமும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகவில்லை.

சூர்யா நடித்து சூப்பர் ஃப்ளாப்பான கங்குவா படத்துக்கும் கடைசி வரை இதே இழுபறி தான் நீடித்தது. தயாரிப்பாளர்கள் 70 சதவீதம் வரை முதல் வார கலெக்‌ஷனில் இருந்து கேட்பது தான் இதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.

pushpa 2 pushpa 3 vijay deverakonda 3

ஆந்திரா, தெலங்கானாவில் எல்லாம் அநியாயத்துக்கு அல்லு அர்ஜுன் படத்துக்கு டிக்கெட் ரேட்டை ஏற்றி ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ரசிகர்களிடம் இருந்து ஆட்டையைப் போட அனைத்து முயற்சிகளும் அரங்கேறி வருவதாக கூறுகின்றனர்.

புஷ்பா 2வுக்கு ரெடியா?: இந்த ஆண்டு இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் வெளியான படங்களில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படம் மட்டுமே 1000 கோடி வசூலை அள்ளியது. விஜய்யின் கோட் திரைப்படம் 500 கோடி வரை வசூல் ஈட்டியது. தெலுங்கில் வெளியான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஜூனியர் என்டிஆரின் தேவரா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 5ம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

சில தியேட்டர்களில்: சென்னையில் சில தியேட்டர்களில் மட்டுமே இதுவரை புஷ்பா 2 படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளன. மாயாஜால் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து 2 நாட்கள் ஆகியும் இன்னமும் பச்சை நிறத்திலேயே காட்சியளிக்கின்றன. ஏஜிஎஸ் நிறுவன தியேட்டர்களில் எல்லாம் ஓரளவுக்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்று ஆரஞ்சு நிறத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரிய வசூல் வேட்டையை புஷ்பா 2 அள்ளுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

pushpa 2 pushpa 3 vijay deverakonda 3

புஷ்பா 3: புஷ்பா 2 படத்துடன் இல்லாமல் புஷ்பா 3 படமும் உருவாகி வருவது அம்பலமாகி உள்ளது. புஷ்பா 2 படத்தின் டிசைனர் தவறுதலாக அதனை லீக் செய்து விட்ட நிலையில், புஷ்பா 3 : ரேம்பேஜ் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. புஷ்பா தி ரைஸ், புஷ்பா தி ரூல் படங்களை தொடர்ந்து புஷ்பா தி ரேம்பேஜ் படமும் விரைவில் வரும் என்கின்றனர். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 போல ஆகாமல் இருந்தால் சரி தான் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

pushpa 2 pushpa 3 vijay deverakonda 3

விஜய் தேவரகொண்டா வில்லன்: புஷ்பா மற்றும் புஷ்பா 2வில் பகத் ஃபாசில் வில்லனாக மிரட்டிய நிலையில், புஷ்பா 3 படத்தில் விஜய் தேவரகொண்டா வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஷ்மிகா மந்தனாவின் காதலரே அல்லு அர்ஜுனுக்கு வில்லனா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே புஷ்பா தி ராம்பேஜ் என விஜய் தேவரகொண்டா போட்ட ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டையும் வெளியிட்டு அன்றே கணித்தார் விஜய் தேவரகொண்டா என டிரெண்ட் செய்து வருகின்றனர். புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஹிட் அடிப்பதை பொறுத்து தான் புஷ்பா 3 படத்துக்கான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X