இத்தனை கோடியா? திமிங்கல வலை விரிக்கும் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்.. சிக்குவாரா மாஸ்டர்?
சென்னை: அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப் போற்று வெளியாகப் போகிறது என்ற தகவலை தொடர்ந்து, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்க ஒடிடி தளங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.
Recommended Video
தியேட்டர்கள் திறக்கப்படுமா? திறந்தாலும் மக்கள் கூட்டம் முன்பை போல வருமா? என்ற கேள்விகள் உள்ளன.
இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பெரிய ஸ்ட்ரீமிங் தளங்கள் முயற்சி செய்து வருகின்றன.

அமேசான் பிரைம்
இந்தியளவில் ரிலீசாகும் படங்களை வாங்கும் போட்டியில் அமேசான் பிரைம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. சின்ன பட்ஜெட் படங்கள் என்றால், சட்டென்று வாங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது அதன் வலையில், சூர்யாவின் சூரரைப் போற்ற் சிக்கி உள்ளது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தையும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடும் போட்டி
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களான தில் பெச்சாரா, லக்ஷ்மி பாம், சடக் 2, புஜ் உள்ளிட்ட படங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் நிலையில், தமிழில் மாஸ்டர் படத்தை வாங்க அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஒடிடி தளங்களுக்குள் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

100 கோடி வரை
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைம் 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை 70 கோடி முதல் 100 கோடி வரை அதிக தொகை கொடுத்த வாங்க ஒடிடி தளங்கள் போட்டி போட்டு வருகின்றனவாம்.

விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு
சூர்யாவின் சூரரைப் போற்று அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல்வேறு தியேட்டர் ஓனர்களும், விநியோகஸ்தர்களும் தங்களின் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனையும் நடிகர் விஜய் மனதில் கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

சிக்குவாரா மாஸ்டர்
தீபாவளிக்காவது மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என நம்பிக்கையில் இருந்த ரசிகர்கள், தற்போது, அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என பரவும் தகவல்களால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். மேலும், ஒடிடி வேண்டாம் காத்திருந்து தியேட்டரிலேயே ரிலீஸ் பண்ணுங்க என்ற ரசிகர்களின் கோரிக்கையும் எழுந்து வருகிறது.

தயாரிப்பாளர் நிலை
இயக்குநர் லோகேஷ் கனகராஜும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும், தளபதி விஜய்யின் இறுதி முடிவு தான் மாஸ்டர் படத்தை பொறுத்தவரையில் என உறுதியாக உள்ளனர். தியேட்டரில் தான் இந்த படம் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு ரிலீசாகும் என சமீபத்தில் சேவியர் பிரிட்டோ பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











