எஸ்ஏ சந்திரசேகரனுக்கு ஆதரவு வெறும் 10... எதிர்ப்பு 204.. விரைவில் தேர்தல்!!
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து எஸ் ஏ சந்திரசேகரன் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
எஸ்ஏசிக்கு எதிராக கேயார் அணி கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்.எ.சந்திரசேகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 204 பேர் எஸ்.எ.சந்திரசேகர் மீது நம்பிக்கை இல்லை என்றும், 10 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபத்தி பத்மநாபன் முன்னிலையிலும், இரு தரப்பிற்கும் சம்பந்தம் இல்லாத 2 வழக்கறிஞர்களை சாட்சியாகக் கொண்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
தயாரிப்பாளர் கேயார் அணி கொண்டு வந்த எஸ்.எ.சந்திரசேகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. தேர்தல் முடிவு உயர்நீதி மன்றத்தில் அறிவிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் எப்போது நடைபெறும் என்று உயர்நீதி மன்றம் அறிவிக்கும்.


Click it and Unblock the Notifications











