அடப்பாவிங்களா.. அப்பாவை போய் மாமாவா மாத்திட்டீங்களே.. நரப்பாவில் நடந்த பெரிய மிஸ்டேக்!
ஹைதரபாத்: வெங்கி மாமா வெங்கி மாமான்னு சொல்லியே அமேசான் பிரைமையே இப்படி கன்ஃபியூஸ் பண்ணீட்டீங்களே.. அப்பான்னு வர வேண்டிய இடத்துல மாமான்னு பெரிய மிஸ்டேக்கை அமேசான் பிரைம் நரப்பா படத்தில் பண்ணி வச்சிருக்கு என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
அசுரன் படத்தின் அதிகாரப்பூர்வமான தெலுங்கு ரீxமேக் நரப்பா நேற்று இரவு அமேசான் பிரைமில் வெளியானது.
தனுஷ் அளவுக்கு அவர் நடித்துள்ளாரா? இல்லையா? என்கிற விவாதங்கள் ஒரு பக்கத்தில் நடந்து வரும் நிலையில், சில நெட்டிசன்கள் அமேசான் பிரைம் பண்ண இந்த பெரிய மிஸ்டேக்கை கண்டு பிடித்துள்ளனர்.

தனுஷின் அசுரன்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் அசுரன். அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நரப்பா
அசுரன் படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய பலரும் போட்டி போட்டு ரீமேக் உரிமைகளை பெற்றுள்ளனர். தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் அசுரன் பட ரீமேக்கான நரப்பாவில் நடித்துள்ளார். அந்த படம் அமேசான் பிரைமில் நேற்று வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது.

யார் சூப்பர்
நடிகர் தனுஷின் நடிப்பு சூப்பரா? அல்லது நரப்பாவாக மாறியுள்ள வெங்கி மாமாவின் நடிப்பு சூப்பரா என தனுஷ் மற்றும் வெங்கடேஷ் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டோலிவுட் ரசிகர்கள் இது ஒரு நேர்மையான நல்ல ரீமேக் என்றே கொண்டாடி வருகின்றனர்.

சப்டைட்டில் பிழை
இந்நிலையில், நரப்பா படத்தின் சப்டைட்டிலில் ஒரு பெரிய மிஸ்டேக் இருப்பதை நெட்டிசன்கள் நோட் பண்ணி அமேசான் பிரைமிற்கு அறிவுறுத்தும் வகையில் போட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. மகனை காப்பாற்ற போராடும் தந்தையின் கதையில் அப்பா - மகன் உறவையே அமேசான் பிரைம் மாற்றியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அப்பாவ போய்
"Uncle I want Coconut chocolate" என சப்டைட்டிலில் மிகப்பெரிய பிழை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அப்பா என்று அழைக்க வேண்டிய இடத்தில் அங்கிள் என போட்டு முறையையும் கதையையும் மாற்றி விட்டதே அமேசான் பிரைம் என டோலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











