ஏன்டா இதை பார்த்துதான் என் பிள்ளை வளரணுமா?.. கமலை ஒருமையில் தாக்கி பேசினாரா அசீம்?
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அசீம் தனது மகன் குறித்து பேசிய விஷயம் கமல் ஹாசனை தாக்கி பேசுவது போல் இருக்கிறதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் சண்டை, சச்சரவுகளும்; எந்த சீசனுக்கும் இல்லாத பேச்சு இந்த சீசனுக்கும் எழுந்தது. அதற்கு காரணம் இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள். குறிப்பாக, விக்ரமன், அசீம், ஷிவின்.

பிக்பாஸ் சச்சரவுகள்
இந்த சீசனில் ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே தனது மகனின் உடல்நிலையை காரணம் காட்டி ஜிபி முத்து தாமாகவே வெளியேற பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஜிபி முத்து பக்கா எண்டெர்டெயினர் அவர் வெளியேறிவிட்டால் இந்த சீசன் பிக்கப் ஆகுமா என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கே இருந்தது. ஆனால் அவர் வெளியேறிய பிறகுதான் சீசன் களைகட்ட தொடங்கியது.
அசீம், தனலட்சுமி, அமுதவாணன், ஜனனி, விக்ரமன், ஷிவின் என பலரது பேச்சும், செயல்பாடுகளும் பார்வையாளர்களிடையே பெரும் விவாதமாகவே மாறிப்போனது. தினமும் தகராறு என ரகளையாக நகர்ந்தது இந்த சீசன்.

வெறியேற்றிய அசீமுக்கு அட்வைஸ் செய்த கமல்
குறிப்பாக அசீமின் ஒவ்வொரு செயல்பாடும், பேச்சும் பலருக்கு முகசுளிப்பையே ஏற்படுத்தியது. திருநங்கையான ஷிவினை உடல்மொழியால் கிண்டல் செய்தது, பார்ப்பவர்களை எல்லாம் தரக்குறைவாக பேசியது என அசீம் எல்லை மீறியே சென்றார். இதனையடுத்து வாரா வாரம் ஹவுஸ் மேட்ஸுடன் பேசும் கமல் அசீமுக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்தார். முக்கியமாக, உங்களது மகன் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் அட்வைஸ் செய்து பார்த்தார். இருப்பினும் பிக்பாஸ் முடியும்வரை அசீம் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

ஹே எப்புட்றா; டைட்டில் வின்னரான அசீம்
ஒருவழியாக விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதிக்குள் நுழைந்தனர். விக்ரமனோ, ஷிவினோதான் பிக்பாஸ் 6 டைட்டில் வின்னராவார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கமல் ஹாசனை தாக்கி பேசினாரா அசீம்?
பிக்பாஸ் வீட்டிலிருந்து டைட்டில் வின்னர் என்ற பெயரோடு வெளியே வந்த அசீம் பல பேட்டிகளை தொடர்ந்து அளித்துவருகிறார். அந்தப் பேட்டிகளும் சர்ச்சையான வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் மக்களுடன் அசீம் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு. ஏன்டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்க பல்லாயிரம் நாள்கள் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சியை பார்த்துதான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமே கிடையாது" என்றார்.

அசீம் மீது கடுமையாக எழுந்திருக்கும் விமர்சனங்கள்
இந்நிலையில் அசீமின் இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். அசீம் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் கமல் ஹாசனைத்தான் மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார். தைரியம் இருந்தால் இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே கமலிடம் இப்படி சொல்லியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











