லோகேஷ் கனகராஜை சந்தித்த அஜித் பட நடிகை.. இவரும் லியோவில் இருக்கிறாரா?
சென்னை: அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை லோகேஷ் கனகராஜை சந்தித்திருக்கிறார். இதனையடுத்து இவரும் லியோ படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக 4 ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ஹிட்டானது. இதனையடுத்து அவரது படத்தில் நடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

லியோவில் குவிந்த நட்சத்திர கூட்டம்
லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மிஷ்கின், த்ரிஷா, சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. காஷ்மீரில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யும், லோகேஷும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஹைப் ஏற்றிய லியோ வசனகர்த்தா
லியோ படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதியிருக்கும் மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகம் வைத்துக்கொள்ளுங்கள். அதைவிட படம் அதிகம் கொடுக்கும் என கூறியிருப்பது லியோ மீதான ஹைப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

லீக்கான லியோ ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள்
நிலைமை இப்படி இருக்க காஷ்மீரில் படப்பிடிப்பு நடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த செயலை செய்தது யார் என்பது குறித்து படக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜை பிக்பாஸ் அபிராமி
இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை அபிராமி லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படம் தற்போது ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் அபிராமியும் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர். இருப்பினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அபிராமி ஏற்கனவே அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











