பிக்பாஸ் பதில் சொல்லுங்க...நள்ளிரவில் கெஞ்சிய சுட்டிப்பிள்ளை ஷாரிக்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி நடக்க உள்ள நிலையில் இரண்டாம் நாளான நேற்று நள்ளிரவில் கேப்டன் ஷாரிக் பிக்பாஸிடம் நள்ளிரவு அனைவரும் உறங்கிய நிலையில் ஒரு கேள்விக்கு பதில் கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தார்.
பிக்பாஸ் அல்டிமேட் சீசன்
பிக்பாஸ் அல்டிமேட் சீசன் தொடங்கி 2 வது நாளில் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று செய்தியாளர் சந்திப்பு டாஸ்க் அனைவரும் ஆர்வமாக பங்கேற்றனர். பல இடக்கு மடக்கான கேள்விகள் வந்தது. இதனால் சூடு கிளம்பியது. ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுவாரஸ்யமாக்கிய வனிதா
நேற்று வனிதா நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார். டீ பாக்கெட்டை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு அனைவரையும் கடுப்பேற்றினார். முதல் நாள் கேப்டனாக விரைப்பாக இருந்த கேப்டன் ஷாரிக் நேற்று வனிதாவிடம் என்ன செய்தும் பாச்சா பலிக்கவில்லை.

தூண்டிவிட்ட அபினய்
இப்படியே இரவான நிலையில் அனைவரும் உறங்கிவிட அபினய் , நிரூப், ஷாரிக், பாலாஜி உள்ளிட்டோர் விழித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும் உறங்கிய நிலையில் அபினய் ஷாரிக்கிடம் நீ கேப்டன் தானே எங்கு வேண்டுமானாலும் உறங்கலாம், ரெஸ்ட்ரிக்டட் ஏரியாவில் போட்டுள்ள படுக்கையிலும் உறங்கலாம் என தூண்டிவிட்டார்.

சிறைக்கு போன பாலாஜி
ஏற்கெனவே ரெஸ்ட்ரிக்டட் ஏரியா சிறப்பு படுக்கையில் படுத்து தூங்கிய பாலாஜி சிறைக்கனுப்பப்பட்டார். இதை சுட்டிக்காட்டிய ஷாரிக் நான் மட்டும் எப்படி படுக்க முடியும் சிக்கலாகாதா என அபினய்யிடம் கேட்க நீ கேப்டன் எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம் என தூண்டிவிட்டுவிட்டு அவர் தூங்கிவிட்டார்.

அலைந்த பிக்பாஸ்
அதன் பின்னர் ஷாரிக் பிக்பாஸிடம் படுக்கையில் படுக்கலாமா எனக்கேட்டு அலைந்தார். நள்ளிரவு 2 மணிக்கு மேல் பிக்பாஸிடம் சிறப்பு படுக்கையில் படுக்கலாமா என ஷாரிக் கேட்க பதில் கிடைக்காததால் லிவிங் ஏரியாவுக்கு சென்று கேமரா முன் பதில் கேட்டார். கேமரா முன் பல தடவை கெஞ்சினார். ஆமான்னு சொல்ல மேலும் கீழும் கேமராவை ஆட்டினாலும் கூட போதும் என்று கெஞ்சினார்.
Recommended Video

பொன்னை வேண்டுமானாலும் தருகிறேன் கெஞ்சிய ஷாரிக்
அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் குகைக்குள் சிக்கிக் கொண்ட எம்.ஜி.சக்ரபாணி வெளியே போக குகைக்கதவை திறக்க கெஞ்சுவார், அதுபோல் இருந்தது அவரது கெஞ்சல் ஆனாலும் பிக்பாஸ் கண்டுக்கொள்ளாததால் தன்முயற்சியில் மனம் தளர்ந்து சோர்ந்துப்போய் தனது படுக்கைக்குச் சென்று படுத்து தூங்கினார்.


Click it and Unblock the Notifications











