ஐயா அவர் எனக்கு அப்பா மாதிரி.. கமல் குறித்த சர்ச்சையில் விளக்கம் கொடுத்த அசீம்
சென்னை: கமல் குறித்து அசீம் ஒருமையில் பேசிவிட்டார் என பேச்சுக்கள் எழுந்திருக்கும் சூழலில் அது தொடர்பாக அசீம் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று எப்பொதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் சண்டை, சச்சரவுகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் சண்டை, சச்சரவுகள் அதிகம் இருந்தன. குறிப்பாக கைகலப்பு வரை சென்றது.

பிக்பாஸ் சச்சரவுகள்
ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஜிபி முத்து வெளியேற இனி இந்த சீசன் பிக்கப் ஆவது கடினம் என ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் ஜிபி முத்து இருந்தால் எப்படி பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதைவிட அதிகமாகவே இந்த சீசன் பக்கா எண்டெர்டெயினாக சென்றது. க்ளாஸை உடைத்த ஜனனி, அமுதவாணன் மேல் கையை வைத்த அசீம், அசீமை சீண்டிய தனலட்சுமி, ரச்சிதாவுடன் நெருக்கம் காட்ட முயன்ற ராபர்ட் மாஸ்டர் என ரகளையாக நகர்ந்தது இந்த சீசன்.

அசீமால் வாரம் ஒரு பஞ்சாயத்து
தரக்குறைவாக பேசுவது, ஷிவினை கிண்டல் செய்தது, விக்ரமனை டார்கெட் செய்தது என இந்த சீசனின் ஹாட் டாபிக்காக அசீம்தான் இருந்தார். வாரா வாரம் ஹவுஸ் மேட்ஸுடன் பேசும் கமல் அசீமுக்கு அட்வைஸ் செய்வதும் ரெகுலரானது. முக்கியமாக, உங்களது மகன் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் அட்வைஸ் செய்து பார்த்தார். இருப்பினும் பிக்பாஸ் முடியும்வரை அசீம் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

வெற்றியாளரானார் அசீம்
விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். விக்ரமன் இல்லை ஷிவின் இவர்கள் இருவரில் ஒருவர்தான் டைட்டிலை வெல்வார்கள் என மக்கள் எதிர்பார்க்க அசீம் டைட்டிலை வென்றார். விக்ரமனும், ஷிவினும் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.

கமல் மீது அசீம் தாக்குதல்?
டைட்டில் வின்னர் என்ற கௌரவத்தோடு வெளியே வந்த அசீம் பல சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். சமீபத்தில் மக்களுடன் அசீம் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு். ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்க பல்லாயிரம் நாட்கள் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சியை பார்த்துதான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமே கிடையாது" என்றார்.

அசீம் மீது எழுந்திருக்கும் கடும் விமர்சனம்
அவரது இந்த பேச்சை பார்த்த ரசிகர்கள், அசீம் கமல் ஹாசனைத்தான் இவ்வாறு பேசியிருக்கிறார். தைரியம் இருந்திருந்தால் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும்போதே கமல் ஹாசனிடம் இப்படி பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் வந்த பிறகு இப்படி பேசுவது நியாயமில்லை என கூறிவருகின்றனர். இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே கமலிடம் இப்படி சொல்லியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அசீம் கொடுத்திருக்கும் விளக்கம்:
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அசீம் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்திருக்கும் விளக்கத்தில், " உங்களுடைய நேரத்தை மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக செலவிடுங்கள். வெறுப்பை காட்டுவதற்கு செலவிட வேண்டாம். நான் கமல் ஹாசனை தாக்கி பேசவில்லை. அவர் எனக்கு ஒரு தந்தை மாதிரி" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











