பிக்பாஸ் விக்ரமனை வச்சு செய்யும் அசீம்.. இப்படி ஓப்பனா இறங்கி அடிக்கிறாரே!

சென்னை: பிரபல யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு ஒரு அரசியல் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார் விக்ரமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட விக்ரமன் 2ஆம் இடத்தை பிடித்து ரன்னர் ஆனார். எப்போதும் விக்ரமனை சுற்றி சர்ச்சைகள் சுழன்று வரும் நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னரான அசீம் விக்ரமனை நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டு பங்கமாய் கலாய்த்து வருகிறார். இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

பிக்பாஸ் போட்டிகளில் யார் வீட்டின் தலைவர் ஆவார் என்பதை விட டைட்டில் வின்னர் என்பது பரபரப்பான செய்தியாகவே இருக்கும். ஊருக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் பிக்பாஸ் பிரச்னை தான் பலருக்கும் தலைவலியை தரும். அவர் ஏன் அப்படி பேசுகிறார். இவர் நடந்துகொள்வது சரியில்லை என பணி செய்யும் இடத்திலும் இதுகுறித்த பேச்சுகளே இருக்கும். எப்போதும் முதல் 2 இடத்தை பிடிப்பவர்களுக்கு இடையே முட்டலும் மோதலுமாகவே இருந்து வரும் அந்தவகையில், ஒரு சீசனில் விக்ரமன் - அசீமும் எதிரும் புதிருமாகவே இருந்து வந்தனர்.

Bigboss Vikraman video Vikraman Azeem

நிதானம்: குறிப்பாக பிக்பாஸ் 6 போட்டியில் தன்னை எதிர்க்கும் நபர்களை நோக்கி கத்துவதையும் மிரட்டுவதையும், தரக்குறைவாக பேசுவதையும் வாடிக்கையாக அசீம் செய்து வந்தார். இந்த சூழலில் மிகவும் நிதானமாகவும் நேர்மை தவறாமலும் விளையாடிய விக்ரமனுக்கு ரசிகர்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்தன. விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அப்போதிருந்தே இருவருக்கும் உரசல் இருந்து வருகிறது.

உள்ளாடையுன் ஓடிய விக்ரமன்?: பிக்பாஸ் போட்டிக்கு பின்னர் விக்ரமன் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர், ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையுடன் ஓடுவது போலவும், அவர் பெண் உடையில் சென்று பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் வீடியோ இணையத்தில் கசிந்தது. பிக்பாஸ் மூலம் பிரபலமான விக்ரமன் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் கேள்வி: முன்னதாக ஒரு பெண்ணை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது பெண் வேடமிட்டு பாலியல் சீண்டல் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியானதை பார்த்த விக்ரமனின் ரசிகர்கள் இதில் இருப்பது நீங்கள் தானா? உங்களை பற்றி இப்படியொரு வீடியோ வெளியாகியுள்ளது என கேள்வி கேட்டு நச்சரித்துள்ளனர். இந்த செய்தியில் பிரபல இயக்குநர் ராஜுமுருகன் மனைவி குறித்த செய்திகளும் வருகின்றன என தொடர் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Bigboss Vikraman video Vikraman Azeem

விக்ரமன் விளக்கம்: இந்த வீடியோ தொடர்பாக விக்ரமன் அளித்த விளக்கம் பின்வருமாறு, சினிமா "படப்பிடிப்பு தொடர்பாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மை தன்மையை ஆராயாமல் எந்த அறமும் இன்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்" என அவர் பதிவிட்டுள்ளார்.

அசீம் காட்டம்: பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அசீமிற்கும் விக்ரமனுக்கும் மறைமுகமாகவே பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரு விரல் நீட்டி மற்றவர்களை நீ குறை கூறும் போது, மூன்று விரல் உன்னை சுட்டிக்காட்டும் என்பதை மறவாதே மனிதா எனக் குறிப்பிட்டு அறம்வென்றது என டேக்கையும் அசீம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு விவேக்கிடம் பேச்சாடா பேசுன மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைனு இப்போ மாவுக்கட்டு பரம்பரை ஆக்கிட்டாங்க என வடிவேலு காமெடி வீடியோவை இணைத்து கலாய்த்து இருக்கிறார்.

More from Filmibeat

Read more about: vikraman azeem
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X