10 கிலோ எடை குறைப்பு.. மீண்டும் பழைய ஷெரினாகவே மாறிட்டார்.. இனிமே ரசிகர்களுக்கு குஷி தான் போங்க!
சென்னை: இந்த லாக்டவுனில் சத்தமே இல்லாமல், 10 கிலோ எடையை கடின உடற்பயிற்சியால் குறைத்துள்ளார் நடிகை ஷெரின்.
Recommended Video
தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஷெரினின் குண்டான போட்டோவை பார்த்து கலாய்த்த பலரும் தற்போது, வாயடைத்துப் போய் நிற்கும் அளவுக்கு கம்பேக் ஆகி உள்ளார் ஷெரின்.

கனவுக் கன்னி
துள்ளுவதோ இளமை, விசில், உற்சாகம், பீமா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னடா, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து, தென்னிந்திய நடிகையாகவும், இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை ஷெரின். கடைசியாக 2015ல் வெளியான நண்பேன்டா படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பிக்பாஸ் பிரபலம்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தவர் நடிகை ஷெரின். ஷனம் ஷெட்டியின் முன்னாள் காதலரான தர்ஷன் உடன் மிகவும் நெருங்கி பழகி வந்தார். தர்ஷன் - ஷனம் பிரேக்கப்புக்கே இவர் தான் காரணம் என்றும் தகவல்கள் பரவின.

திருமணம் ஆகவில்லை
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை ஷெரினுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நடிகையாக கலக்கி வந்த நடிகை ஷெரின், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் திரையுலகில் கம்பேக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த லாக்டவுன் வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.

பாடி ஷேமிங்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலே மிகவும் குண்டாக இருந்த நடிகை ஷெரின், நீச்சல் உடையில் அதற்கு பிறகு வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை பாடி ஷேமிங் செய்தனர். நீங்க ரொம்ப குண்டா இருக்கீங்க என்று கிண்டல் செய்து வந்த நெட்டிசன்களுக்கு தற்போது தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

10 கிலோ எடை
இந்த மூன்று மாதத்துக்கும் மேலான லாக்டவுனில், பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உடல் எடையை குறைத்தது போலவே, தற்போது நடிகை ஷெரினும் கிட்டத்தட்ட 10 கிலோவுக்கும் மேல் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு, பழைய செக்ஸி ஷெரினாக சிக்கென்ன மாறி உள்ளார்.

பிரபலங்கள் பாராட்டு
ஷெரினின் இந்த அட்டகாசமான டிரான்ஸ்ஃபர்மேஷனை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் வாயை பிளந்து இருக்கும் நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான ரேஷ்மா மற்றும் சாக்ஷி அகர்வால், ஷெரினின் இந்த விடா முயற்சியை பாராட்டி வருகின்றனர். உன்னை நினைத்து பெருமையா இருக்கு என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

இனிமே ஜாலிதான்
யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால், ரேஷ்மா போன்ற பிக்பாஸ் பிரபலங்கள் போல, இனிமே அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் நடிகை ஷெரினும் களமிறக்குவார் என்பதை அறிந்து கொண்ட இணையவாசிகள், ஷெரினின் இந்த அதிரடி மாற்றத்தால் சந்தோஷம் அடைந்து வருகின்றனர். லாக்டவுன் முடியட்டும் கோலிவுட் வாய்ப்புகளும் ஷெரினுக்கு எக்கச்சக்கமாக கிடைக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











