திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா.. இன்னும் என்னவெல்லாம் சொல்வீங்க.. பாவனி காட்டம்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாவனி. சின்னத்திரை நடிகையான பாவனி, இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர் அமீர், பாவனியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, நீண்ட தயக்கம் மற்றும் இழுத்தடிப்பிற்கு பின்பு ஏற்றுக் கொண்டார்.
சமீபத்தில் தங்களது திருமணத்தையும் இந்த ஜோடி உறுதி செய்துள்ளது. இன்னும் ஒரு வருடம் கழித்தே தங்களது திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

பிக்பாஸ் புகழ் பாவனி
கடந்த 2021ம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் துவக்கத்திலிருந்தே போட்டியாளராக கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் பாவனி. முன்னதாக ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்திருந்தார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த பாவனிக்கு கூடுதல் போனசாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பாவனியிடம் காதல் சொன்ன அமீர்
அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்றில் இணைந்த நடன இயக்குநர் அமீர், பாவனி மீது காதல் கொண்டார். பாவனியின் முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த நிலையில், அமீரின் காதலை ஏற்க முடியாமல் காலம் தாழ்த்தி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த ஜோடி இடையில் விலகினாலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான நடனத்தை கொடுத்தது. அமீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பாவனி தடுமாறினாலும் ஓரளவிற்கு கைக்கொடுத்து டைட்டிலை வெற்றி கொள்ள உதவினார்.

காதலை ஏற்ற பாவனி
தொடர்ந்து இந்த நிக்ழச்சியின் மேடையிலேயே அமீரின் காதலையும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து இவர்கள் இருவரும் ஜோடியாக அஜித்தின் துணிவு படத்திலும் நடித்திருந்தனர். தொடர்ந்து இருவரும் தங்களது திருமணத்தையும் உறுதி செய்துள்ளனர். ஆனால் ஒரு ஆண்டு கழித்துதான் தங்களது திருமணம் என்பதிலும் உறுதியாக உள்ளனர். ஆனால் இருவரும் இணைந்து வெளிநாடுகளிலும் ஒன்றாக சுற்றித் திரிந்து வருகின்றனர்.

வெளிநாட்டில் சுற்றுப்பயணம்
சமீபத்தில் தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களையும் பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் பாவனி. அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கோயிலில் போட்டோஷுட் எடுத்து பாவனி பகிர்ந்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

கர்ப்பம் குறித்த வதந்திக்கு பாவனி காட்டம்
இந்நிலையில் சமீபத்தில் பாவனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், பாவனிக்கும் அமீருக்கும் திருமணம் நடந்ததை ஏன் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பாவனி, கடந்த மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினீர்கள், அடுத்ததாக நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறினீர்கள், தற்போது எங்களுக்கு திருமணம் நடந்ததாக கூறுகிறீர்கள், அடுத்தது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











