Ameer -Pavani :ஸ்டைல் புகைப்படங்களை வெளியிட்ட அமீர் -பாவனி.. பொருத்தமான ஜோடிதான்!

சென்னை : பிக்பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவனி ரசிகர்களை கவர்ந்த மிகச்சிறந்த ஜோடியாக இருந்து வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையிலும் அடுத்ததாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றனர்.

தற்போது அமீர், படமியக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவர்கள் இருவரும் நடிக்கவுள்ள நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது.

Bigboss Season 5 Ameer & Pavani pair released their recent photographs in Instagram

அமீர் -பாவனி புகைப்படங்கள் : சீரியல் நடிகையான பாவனி, விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக துவக்கம் முதலே பங்கேற்றார். அவரது முதல் திருமண வாழ்க்கை மற்றும் முதல் கணவரின் தற்கொலை போன்றவற்றை அவர் பகிர்ந்த நிலையில், சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். இதனிடையே போட்டியின் இடையில் நுழைந்த நடன இயக்குநர் அமீர், பாவனியின் வாழ்க்கை குறித்து தெரிந்தவுடன் மிகவும் வேதனை அடைந்தார்.

தொடர்ந்து பாவனியிடம் தன்னுடைய காதலை பிக்பாஸ் போட்டியின்போதே வெளிப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாவனி, அவரது காதலை ஏற்கவில்லை. ஆனால் வாழ்க்கையில் மிகுந்த வேதனைகளை அனுபவித்த பாவனி, அமீருடன் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். ஆனால் இந்தப் போட்டியின் இறுதிவரை இவர்கள் இருவரின் காதலும் கைகூடவில்லை. இந்தப் போட்டியிலிருந்து வெளியேறியபின்பும் அமீரின் காதலை ஏற்காமல் போக்கு காட்டினார் பாவனி.

Bigboss Season 5 Ameer & Pavani pair released their recent photographs in Instagram

இதையடுத்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அமீருக்கு இணையான நடன அசைவுகளை பாவனியால் கொடுக்க முடியவில்லை என்ற போதிலும், ஓரளவிற்கு ஈடுகொடுத்து நடனமாடினார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை அவர்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அந்த வெற்றி மேடையிலேயே தன்னுடைய காதலை பாவனி உறுதி செய்தார். தொடர்ந்து இவர்கள் காதலால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

தொடர்ந்து சில வாரங்களிலேயே, தங்களது காதலை உறுதி செய்த இந்த ஜோடி, ஆனால் திருமணம் ஒரு ஆண்டு கழித்துதான் என்பதை தெளிவாக அறிவித்தது. ஆனால் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டனர். இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்திருந்தனர். இந்நிலையில், தாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து அறிவித்த அமீர், தான் அந்தப் படத்தை இயக்கவுள்ளதையும் அறிவித்தார். இந்தப் படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது.

Bigboss Season 5 Ameer & Pavani pair released their recent photographs in Instagram

தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் இருவரும் இணைந்து, சிவப்பு நிற தீமில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களில் அமீர் கோட் சூட்டில் காணப்பட, பாவனியோ, பாரம்பரியம் கலந்த நவீன உடையில் அழகாக காணப்படுகிறார். இருவரும் இணைந்து இந்தப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X