twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேட்டைக்கு ரெடியா.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரமோ.. என்ன கமல் இப்படி கேக்கறாரு!

    |

    சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

    நேற்றைய தினம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி தன்னுடைய முதல் ப்ரமோவை வெளியிட்டது.

    இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.

    விரைவில் பிக்பாஸ் சீசன் 6.. விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் ப்ரமோ.. வீ ஆர் வெயிட்டிங்! விரைவில் பிக்பாஸ் சீசன் 6.. விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் ப்ரமோ.. வீ ஆர் வெயிட்டிங்!

    பிக்பாஸ் நிகழ்ச்சி

    பிக்பாஸ் நிகழ்ச்சி

    விஜய் டிவியின் முதன்மையான மற்றும் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன், தொடர்ந்து 3 மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதுதான். எலிமினேஷன் ஆனால் மட்டுமன்றி நிகழ்ச்சியில் இருந்து அவர்களால் வெளியேற முடியாது.

    இந்த சீசனின் காதல் ஜோடி

    இந்த சீசனின் காதல் ஜோடி

    மேலும் ஒரே வீட்டிற்குள் இருக்கும் 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், இந்த குறிப்பிட்ட நாட்களில் அவர்களின் சுகங்கள் துக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்தான் நடக்கும். ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒரு காதல் ஜோடி இந்த நிகழ்ச்சியில் உருவாகும் நிலையில் இந்த சீசனில் இந்த விஷயத்தை யார் செய்வார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் உள்ளது.

    தாமதமான பிக்பாஸ் நிகழ்ச்சி

    தாமதமான பிக்பாஸ் நிகழ்ச்சி

    எப்போதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் வகையில் தான் அமையும். ஆனால் இந்த சீசன் தற்போது சிறிது காலதாமதமாகவே துவங்கியுள்ளது. நேற்றைய தினம் தன்னுடைய முதல் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதிலும் விரைவில் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

    கமலின் புதிய ப்ரமோ

    கமலின் புதிய ப்ரமோ

    இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் பிரம்மாண்டமான கதவு திறக்கப்பட்டு அதிலிருந்து கம்பீரமாக நடந்துவரும் கமல் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தவாறே வேட்டைக்கு ரெடியா என்று கேள்வி எழுப்புகிறார்.

    விரைவில் பிக்பாஸ் சீசன் 6

    விரைவில் பிக்பாஸ் சீசன் 6

    இந்தப் ப்ரமோவை அடுத்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளதால் சில தினங்களிலேயே நிகழ்ச்சி துவங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு வெயிட்டிங்

    அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு வெயிட்டிங்

    ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் யார் கலந்துக் கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புத் தேதியை அறிவித்தவுடன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து உடனடியாக அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    English summary
    Big boss season 6 show's new promo with Kamal haasan released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X