அச்சு அசலாய் எம்ஜிஆர்....வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய 'மொட்ட தாத்தா'

சென்னை : நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், டைரக்டர், சமையல் வல்லுநர் என பல திறமைகளைக் கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி, சினிமாவில் இருந்து விலகி, ஆஸ்திரேலியாவில் சொந்தமாக ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்தி வந்தார்.

அதற்கு பிறகு மீண்டும் இந்தியா திரும்பிய சுரேஷ், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமாகி விட்ட சுரேஷ் சக்கரவர்த்தியை பலரும் மொட்ட தாத்தா என செல்லமாக கூப்பிட்டு வருகின்றனர்.

மீண்டும் சினிமாவில் சுரேஷ்

மீண்டும் சினிமாவில் சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்மட்டுமல்ல மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சுரேஷ் சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ளது. பல படங்களில் நடித்து வரும் சுரேஷ், சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

எம்ஜிஆர் வேடத்தில் சுரேஷ்

எம்ஜிஆர் வேடத்தில் சுரேஷ்

இதற்கிடையில் விஜய் டிவி.,யில் நடைபெற்று வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொண்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் பிற சினிமா கேரக்டர்களை போன்று மேக்அப் போட்டுக் கொண்ட சுற்றில், சுரேஷ் எம்ஜிஆர் வேடத்தை தேர்வு செய்தார்.

வைரலாகும் ஃபோட்டோ

வைரலாகும் ஃபோட்டோ

வனிதா விஜயக்குமாரும் ஷாரிக்கும் சுரேஷுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. சுரேஷிற்கு போடப்பட்டுள்ள மேக்அப் அச்சு அசலாய் எம்ஜிஆர்.,ஐ போல் உள்ளதைக் கண்டு பலரும் பிரம்மிச்சு போய் உள்ளனர்.

வனிதா விஜயக்குமார் பகிர்ந்த ஃபோட்டோ

வனிதா விஜயக்குமார் பகிர்ந்த ஃபோட்டோ

இந்த எபிசோட் விரைவில் டிவி.,யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனிதா விஜயக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவை தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X