காலில் விழத் தயார்... மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்ரவர்த்தி... எதுக்கு தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட்டாக தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி. உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி மிகுந்த வெற்றியை கொடுத்துள்ளது. ஒரே வீட்டில் இருக்கும் பிரபலங்களின் நடவடிக்கைகளை மையமாக கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். சமீபத்தில் இதன் ஐந்தாவது சீசன் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது நேரலையில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட்டாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

விலகிய உலகநாயகன்

விலகிய உலகநாயகன்

இந்த நிகழ்ச்சியையும் ஆரம்பத்தில் உலகநாயகனே தொகுத்து வழங்கிய நிலையில், தனது விக்ரம் படத்தின் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல். தொடர்ந்து 6வது சீசனில் சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மீண்டும் வந்த சுரேஷ் சக்ரவர்த்தி

மீண்டும் வந்த சுரேஷ் சக்ரவர்த்தி

இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார். ஒருசில வாரங்கள் எலிமினேஷன் இல்லாத நிலையும் இருந்தது. இந்நிலையில் ஆரம்பத்திலேயே எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

சினேகன் வெளியேற்றம்

சினேகன் வெளியேற்றம்

இந்நிலையில் தொடர்ந்து பலவித அதிரடிகளுடன் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேறினார். கடந்த வாரத்தில் பாடலாசிரியர் சினேகன் எலிமினேட் ஆனார். இவ்வாறு தொடர்ந்து நிகழ்ச்சி பரபரப்புடன் சென்று வருகிறது. தன்னுடைய பங்கிற்கு சிம்புவும் அதிரடிகளை கிளப்பி வருகிறார்.

46வது நாளாக நிகழ்ச்சி

46வது நாளாக நிகழ்ச்சி

தொடர்ந்து 46வது நாளாக நிகழ்ச்சி சிறப்பாக சென்று வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி, சீக்கிரமாக வாக்களிக்க கோரிக்கை வைக்கிறார். மேலும் சாப்பாடு தாமதமானதற்கு ஹவுஸ்மேட்சிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

காலில் விழத் தயார்

காலில் விழத் தயார்

தொடர்ந்து பேசும் அவர், தான் செய்த பெரிய தவறுக்கு அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைத்தாலும் தான் விழத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிகழ்வுகளும் இந்த ப்ரோமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X