twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொமான்டிக் ரீயூனியன்... கவினின் ஆகாஷ் வாணி ஃபஸ்ட்லுக் வெளியீடு

    |

    சென்னை : பிக்பாஸ் கவின் நடிக்கும் ரொமான்டிக் வெப் சீரிசான ஆகாஷ் வாணியின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் ஆர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிக்க வந்தவர் கவின். பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானார். பிறகு பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, அனைவருக்கும் தெரிந்தவர் ஆகி விட்டார் கவின்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை லாஸ்லியாவுடன் காதல் கிசுகிசுக்களில் அதிகம் அடிபட்டார் கவின். இது அந்த சீசனின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதுவும் லாஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் வந்த போது காட்டிய கோபம், சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து கவின் செய்த கலாட்டாக்கள் அந்த சீசனை மிகவும் பிரபலமாக்கியது.

    ஜெயிக்க இன்னும் ஒரு சான்ஸ்...நாளை அனல் பறக்கும் பிக்பாஸ் அல்டிமேட் Grand Launch ஜெயிக்க இன்னும் ஒரு சான்ஸ்...நாளை அனல் பறக்கும் பிக்பாஸ் அல்டிமேட் Grand Launch

    லிஃப்டில் அலற விட்ட கவின்

    லிஃப்டில் அலற விட்ட கவின்

    பிக்பாஸ் சீசனிற்கு டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அதை முடித்த கையோடு அடுத்த படமாக லிஃப்ட் படத்தில் நடித்தார். அமிர்தா ஐயருக்கு ஜோடியாக த்ரில்லரிங்கில் அனைவரையும் மிரள வைத்து, அனைவரிடமும் பாராட்டை பெற்றார் கவின்.

    ரொமான்டிக் வெப்சீரிஸ்

    ரொமான்டிக் வெப்சீரிஸ்

    லிஃப்ட் படத்திற்கு பிறகு கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வர துவங்கி விட்டன. அதோடு நெல்சன் திலீப்குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களிலும் அசிஸ்டென்டாக பணியாற்றினார் கவின். தற்போது தனது அடுத்த படைப்பாக ரொமான்டிக் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். இதற்கு ஆகாஷ் வாணி என பெயரிடப்பட்டுள்ளது.

    இவர் தான் டைரக்டரா

    இவர் தான் டைரக்டரா

    இதில் கவினுக்கு ஜோடியாக ரிபா மோனிகா டைட்டில் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் ஷரத் ரவி, தீபக் பரேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கிறார். Abel Enoc Gomez இயக்கும் இந்த வெப் சீரிசை Kausthuba media works தயாரிக்கிறது. குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார். டைரக்டர் Abel Enoc Gomez, அட்லீ இயக்கிய ராஜா ராணி, மெர்சல், பிகில் படல்களில் அசிஸ்டென்டாக பணியாற்றி உள்ளார்.

    ரொமான்டிக் ரீயூனியன்

    ரொமான்டிக் ரீயூனியன்

    இந்த ரொமான்டிக் வெப் சீரிசின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா இன்று ட்விட்டரில் வெளியிட்டார். இதற்காக கவின், ஆர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேக் சாலையில் இரவு நேரத்தில் கவினும், ரிபா மோனிகாவும் ரொமான்டிக்காக பைக்கில் ஜாலி ரைடு வருவது போது இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரும் சாலையில் ரொமான்டிக் ரீயூனியன் என எழுதப்பட்டுள்ளது.

    English summary
    Bigg boss fame Kavin's next project is romantic webseries titled as Akash Vaani. This web series first look poster was released today by Actor. Kavin thanked arya for this launch. Fans wished kavin for this project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X