டீசரே அசத்தலா இருக்கே...கவினின் ஆகாஷ் வாணியை பாராட்டும் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் ரொமான்டிக் வெப் சீரிசான ஆகாஷ் வாணியின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிக்க வந்தவர் கவின். பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானார். பிறகு பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, அனைவருக்கும் தெரிந்தவர் ஆகி விட்டார் கவின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை லாஸ்லியாவுடன் காதல் கிசுகிசுக்களில் அதிகம் அடிபட்டார் கவின். இது அந்த சீசனின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதுவும் லாஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் வந்த போது காட்டிய கோபம், சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து கவின் செய்த கலாட்டாக்கள் அந்த சீசனை மிகவும் பிரபலமாக்கியது.

லிஃப்டில் அலற விட்ட கவின்

லிஃப்டில் அலற விட்ட கவின்

பிக்பாஸ் சீசனிற்கு டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அதை முடித்த கையோடு அடுத்த படமாக லிஃப்ட் படத்தில் நடித்தார். அமிர்தா ஐயருக்கு ஜோடியாக த்ரில்லரிங்கில் அனைவரையும் மிரள வைத்து, அனைவரிடமும் பாராட்டை பெற்றார் கவின்.

ரொமான்டிக் வெப்சீரிஸ்

லிஃப்ட் படத்திற்கு பிறகு கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வர துவங்கி விட்டன. அதோடு நெல்சன் திலீப்குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களிலும் அசிஸ்டென்டாக பணியாற்றினார் கவின். தற்போது தனது அடுத்த படைப்பாக ரொமான்டிக் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். இதற்கு ஆகாஷ் வாணி என பெயரிடப்பட்டுள்ளது.

 இவர் தான் டைரக்டரா

இவர் தான் டைரக்டரா

இதில் கவினுக்கு ஜோடியாக ரிபா மோனிகா டைட்டில் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் ஷரத் ரவி, தீபக் பரேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கிறார். Abel Enoc Gomez இயக்கும் இந்த வெப் சீரிசை Kausthuba media works தயாரிக்கிறது. குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார். டைரக்டர் Abel Enoc Gomez, அட்லீ இயக்கிய ராஜா ராணி, மெர்சல், பிகில் படங்களில் அசிஸ்டென்டாக பணியாற்றி உள்ளார்.

காமெடியில் பின்னுறாங்களே

காமெடியில் பின்னுறாங்களே

ஆகாஷ் வாணி வெப்சீரிசின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டைட்டிலேயே காதலை பற்றிய கதை என சொல்கிறார். அதனால் ரொமான்ஸ் தான் அதிகம் இருக்கும் நினைத்தால், காமெடியில் பின்னி எடுத்திருக்கிறார்கள். காமெடி, காதல், எமோஷன் என நடிப்பில் அசத்தி உள்ளார் கவின். இந்த டீசர், ரசிகர்களை கவர்ந்து பாராட்டுக்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X