எந்த ரூல்ஸ் போட்டாலும் வேஸ்ட்...போட்டியாளர்களை கலாய்த்த பிக்பாஸ்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 76 வது நாளான இன்று துவக்கத்திலேயே பாவனியை சூட்கேசிற்குள் அடைத்து அனைவரையும் அதிர வைத்தார் ராஜு. பாவனியும் எப்படி அந்த பெட்டிக்குள் அடங்கினார். இதை அவர் அடிக்கடி வீட்டில் செய்வார் என அவரே சொன்னது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இதைத் தொடர்ந்து லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் பெற்ற புள்ளிகளின் விபரத்தை ராஜு வாசித்தார். அதில் பிக்பாஸ் போட்டியாளர்களை கலாய்த்திருந்தார். வழக்கமாக பிரியங்கா போன்றவர்கள் தான் பிக்பாசை பெரிசு, பாஸ், தலைவா என ஏதாவது சொல்லி கலாய்ப்பார்கள். ஆனால் தற்போது பிக்பாஸ், போட்டியாளர்களை கலாய்த்திருப்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

ரூல்ஸ் வேஸ்ட்
லக்சுரி பட்ஜெட் டாஸ்க் புக்கில், இந்த வாரம் தான் லக்சுரி பட்ஜெட் டாஸ்கே நடத்தலியே அப்புறம் எதற்கு லக்சுரி பட்ஜெட் என கேட்கலாம். இருந்தாலும் மனசு கேட்கல. இந்தாங்க எடுத்துக்கோங்க 2200 மதிப்பெண்கள். விதிமுறைகள், என்னதான் விதிமுறைகளை நாங்க மாங்கு மாங்குன்னு டைப் பண்ணி அனுப்பினாலும் அதை நீங்க கடைபிடிக்க போவதில்லை. உங்களுக்கு தோன்றியதை தான் பண்ண போகிறீர்கள். இருந்தாலும் அனுப்ப வேண்டியது எனது கடமை என ராஜு படிக்கிறார்.

உண்மை தானா
இதை கேட்ட மற்ற போட்டியாளர்கள், உண்மையாகவே அப்படி தான் எழுதி இருக்கா, இல்லை நீ ரூமிற்குள் உட்கார்ந்து எழுதி விட்டு வந்து படிக்கிறாயா என சந்தகமாக கேட்கிறார்கள். ராஜு ரூல்ஸ் புக்கை ஹவுஸ்மேட்களிடம் காட்டி, நிஜமாவே இருக்கு பாருங்க என்கிறார். வருண் பக்கத்தில் சென்று பார்த்ததும் மற்றவர்கள் விழுவிழுந்து சிரிக்கிறார்கள்.

கணக்கு தெரிஞ்சவங்க வாங்க
தொடர்ந்து ராஜு புக்கை படிக்க, அதில், நல்லா கணக்கு தெரிஞ்ச ஆளாக பார்த்து எழுத சொல்லுங்கள்.இல்லை என்றால் மொத்த மதிப்பெண்ணும் காலி. வெறும் கையை வீசிக் கொண்டு தான் போக வேண்டும். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. புன்னகைக்க மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டி ஃபெல்லோ
இதைக் கேட்ட பிரியங்கா, நாட்டி ஃபெல்லோ. ஐ லைக் யூ வெரி மச் என சொல்கிறார். மற்ற போட்டியாளர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள். ஹவுஸ்மேட்களை மட்டுமல்ல ரசிகர்களை பிக்பாசின் இந்த கலாய் ரசிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











