இந்த வார நாமினேஷன் லிஸ்ட்... டேஞ்சரில் இருக்கும் போட்டியாளர் !
சென்னை : இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ஐக்கி, பவானி, சிபி, இமான், அக்ஷரா, நிரூப், இசைவாணி, தாமரை, அபினய் என 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த வாரம் நாமினேட் ஆன ராஜுவை யாரும் இந்த வாரம் நாமினேட் செய்யவில்லை. அதேபோல, வருணையும் யாரும் நாமினேட் செய்யவில்லை.
தலைவர் பதவிக்கான போட்டியில் பிரியங்கா வெற்றி பெற்று வீட்டின் தலைவர் ஆனார்.

ஸ்பிரே அடித்து நாமினேஷன்
பிக் பாஸ் வீடு நேற்று திங்கட்கிழமை என்பதால், தலைவர் பதவிக்கான போட்டி, நாமினேஷன் ப்ராசஸ் என வீடு பரப்பாக இருந்தது. இதையடுத்து, நாமினேஷன் ப்ராசஸ் கார்டன் ஏரியாவில் நடைபெற்றது. அதில் ஒரு ஸ்டாண்ட் அமைத்து போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது. நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளரின் புகைப்படத்தில் ஸ்பிரே அடித்து, அவரை நாமினேட் செய்தனர்.

நாமினேஷன் ப்ராசஸ்
முதல் நபராக வந்த வருண், நிரூப், பவானி, இசைவாணி ஆகியோரை நாமினேட் செய்தார். இதையடுத்து வந்த பவானி, ஐக்கி பெர்ரி,தாமரை, அக்ஷராவை நாமினேட் செய்தார். தொடர்ந்து வந்த ம்ற்ற போட்டியாளர்கள் பல கருத்தை செய்து கூறி, நாமினேட் செய்தனர்.

9 பேர் நாமினேஷனில்
இதையடுத்து, எவிக்ஷனுக்கு யார் யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், ஐக்கி, பவானி, சிபி, இமான், அக்ஷரா, நிரூப், இசைவாணி, தாமரை மற்றும் அபினய் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள்.

மது வெளியேறினார்
கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் இருந்தனர். இதில் அபினய் வெளியேறுவார் என சகபோட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் காப்பாற்றப்பட்டார். இறுதியாக இமான், மது இருந்த நிலையில் மது வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

அபினய் காப்பாற்றப்படுவாரா
இந்த வாரமும் அபினய் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை சென்று திரும்பும் அபினய் இந்த வாரமும் காப்பாற்றப்படுவாரா இல்லை இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications