சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் வைத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 10வது சீசனை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஒரு வீட்டில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.
அவர்களின் செயல்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமியார் ஸ்வாமி ஓம் வெளியேற்றப்பட்டார்.

சிறுநீர்
பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்த ஸ்வாமி ஓம் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரை சக போட்டியாளர்களான பானி ஜே மற்றும் ரோஹன் மெஹ்ரா மீது தெளித்தார். இதை பார்த்த சல்மான் கான் கடுப்பாகி ஸ்வாமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்.

சல்மான்
அநாகரீகமாக நடந்து கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்வாமி ஓம் இந்தி செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டின் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து நான் சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன் என்றார்.

ஸ்வாமி ஓம்
ஸ்வாமி ஓம் விளம்பரத்திற்காக பல பேட்டிகள் கொடுப்பவர் என பெயர் எடுத்துள்ளார். அதனால் அவர் சல்மானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கூறப்படுகிறது.

கோபம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு சல்மான் கான் தனது வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்துள்ளார். ஆனால் அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பதை அறிந்த சல்மான் கோபத்தில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











