எனக்கு திகார் நினைவு வந்துடுச்சு, வீட்டுக்குப் போறேன்: பிக் பாஸிடம் அழுத ஸ்ரீசாந்த்
பனாஜி: பிக் பாஸ் வீட்டில் உள்ள கன்ஃபெஷன் அறையில் அழுதுள்ளார் ஸ்ரீசாந்த்.
சூதாட்ட வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதில் இருந்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தண்டனை
பிக் பாஸ் வீட்டில் விதிமுறைகள் மீறினால் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி விதிகளை மீறிய ஸ்ரீசாந்த் பாத்திரம் கழுவ வேண்டும் என்ற தண்டனை அளிக்கப்பட்டது. அவருன் பாத்திரம் கழுவினார். ஆனால் பாத்திரம் கழுவிய பிறகு அவர் பயங்கர எமோஷனலாகி அழுதுவிட்டார். நான் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று தெரிவித்தார்.

ஸ்ரீசாந்த்
ஸ்ரீசாந்த் அழுததை பார்த்த பிக் பாஸ் அவரை கன்ஃபெஷன் அறைக்கு வருமாறு கூறினார். அந்த அறைக்கு சென்ற ஸ்ரீசாந்த் பாத்திரம் கழுவியபோது திகார் சிறையில் பாத்திரம் கழுவிய பழைய நினைவு எல்லாம் திரும்பி வந்ததாக பிக் பாஸிடம் கூறி மீண்டும் அழுதார். இதற்காக எல்லாம் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என்று கூறி பிக் பாஸ் அவரை சமாதானம் செய்து வைத்தார்.

சூதாட்டம்
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அவ்வப்போது ஒன்று கூடி ஸ்ரீசாந்தை கலாய்க்கிறார்கள். இதனால் அவர் கோபப்படுகிறார். அவர் டென்ஷன் ஆவதை பார்த்து வெளியே இருக்கும் அவரின் மனைவி வேதனைப்படுகிறார். யாராவது என் கணவரை சூதாட்டக்காரர் என்று கூறினால் கேஸ் போடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

ஆதரவு
பிக் பாஸ் 11 டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டே ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஷில்பா ஷிண்டேவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர். ஸ்ரீசாந்தின் கோபம் தெரிந்தும் அவரை போய் ஆதரிக்கிறீர்களே என்று ஷில்பாவின் ரசிகர்களே அவரை திட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











