என்னை பார்த்து அப்படி சொல்வியா?: பிக் பாஸ் போட்டியாளரை அறைந்த ஸ்ரீசாந்த்
மும்பை: பிக் பாஸ் 12 வீட்டில் இருக்கும் ஸ்ரீசாந்த் சக போட்டியாளரை அறைந்துள்ளார்.
பிக் பாஸ் 12 இந்தி நிகழ்ச்சி விரைவில் நிறைவடைய உள்ளது. அந்த வீட்டிற்குள் வந்ததில் இருந்து சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
அவராலேயே நிகழ்ச்சியின் டிஆர்பி கண்டமேனிக்கு ஏறிக் கொண்டிருக்கிறது.
அறை
கேப்டன்சி டாஸ்கின்போது ஸ்ரீசாந்துக்கும் சக போட்டியாளரான ரோஹித் சுசாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரோஹித் ஸ்ரீசாந்தை பார்த்து பிச்சைக்காரன் என்று கூற அவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. உடனே ரோஹித்தை கன்னத்தில் அறைந்துவிட்டார் ஸ்ரீசாந்த்.

வெளியேற்றம்
வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் அடிதடியில் ஈடுபடும் நபரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் திட்டி வெளியே அனுப்பிவிடுவார். ஆனால் ஸ்ரீசாந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறுவதால் அவரை மன்னித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீசாந்த் இப்படி எல்லாம் செய்வார் என்று எதிர்பார்த்து தானே அழைத்து வந்திருப்பார்கள்.

ஐஸ்
அது என்ன ஸ்ரீசாந்த் மட்டும் ஒஸ்தியா என்று பார்வையாளர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். அதனால் அவர்களை திருப்திபடுத்த ஸ்ரீசாந்தை தனி அறையில் தங்க வைத்துவிட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எதுவாக இருந்தாலும் ஸ்ரீசாந்தை வெளியேற்ற பிக் பாஸ் தயாராக இல்லை.

வெளியேற்றம்
முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வேகத்தில் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீசாந்த் அழுதார். நான் உடனே வீட்டிற்கு போக வேண்டும் என்று பிக் பாஸிடம் கூறினார். பிக் பாஸோ அவரை கன்ஃபெஷன் அறைக்கு வரவழைத்து சமாதானம் செய்து வீட்டிற்குள் தங்க வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











