“காதலருடன் பிக்பாஸ்-க்கு வருகிறேன்”.. உண்மையை ஓப்பனாக சொன்ன சர்ச்சை நடிகை!

இந்தி பிக் பாஸில் நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொள்ள இருக்கிறார்.

Recommended Video

Bigg Boss 3: ஜூன் 23 துவங்கியிருக்கும் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் பட்டியல்- வீடியோ

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது காதலருடன் கலந்து கொள்ள இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

தமிழைப் போலவே இந்தி மற்றும் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கிற்கெல்லாம் சீனியர் இந்தி பிக் பாஸ். அதில் தற்போது 13வது சீசன் தொடங்க உள்ளது.

Bigg Boss 13: Rakhi Sawant to enter with Deepak Kalal?

இந்த சீசனில் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியான ராக்கி சாவந்தும் ஒரு போட்டியாளராக களமிறங்க இருக்கிறார். தனது காதலர் தீபக்குடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்புக்காக அவர் சல்மான் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் ஆர்யா கலந்து கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி போல், இந்தியில் சுயம்வரம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராக்கி சாவந்த். அதனைத் தொடர்ந்து கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு என பல சர்ச்சைகளில் சிக்கினார்.

கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த், தனது காதலருடன் கலந்து கொள்வதால் இந்தி பிக் பாஸ் கலர்புல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழிலும் இம்மாதம் 23ம் தேதி பிக் பாஸ் சீசன் 3 தொடங்க இருக்கிறது. இதில் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X