ஆபாச பட நடிகைக்கு பிக் பாஸ் டைட்டிலா? சல்மான் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. அங்கேயும் சர்ச்சை!
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது தான். சமீப காலமாக வேண்டுமென்றே பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவை பலரும் சர்ச்சை விழாவாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீமுக்கு டைட்டில் கொடுத்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அசீம், விக்ரமன் பஞ்சாயத்து யூடியூப் பேட்டிக்கள் மூலம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தி பிக் பாஸ் சீசன் 16ல் மட்டும் சர்ச்சை இல்லாமல் இருக்குமா என்ன?

இங்கே அசீம் அங்கே ஆபாச பட நடிகை
பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டிலை அசீம் வென்ற நிலையில், பெண்களையும், திருநங்கையும் மதிக்காத ஒருவருக்கு எப்படி பிக் பாஸ் டைட்டில் கொடுத்தார்கள் என கொதித்தெழுந்தனர். அசீமுக்கு டைட்டில் கொடுத்ததால் இனிமேல் விஜய் டிவியே பார்க்க மாட்டோம் என்கிற ரேஞ்சுக்கு ட்வீட்கள் பறந்தன. இந்நிலையில், இந்தி பிக் பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆபாச பட நடிகை வருவாரா? என்கிற கேள்வியுடன் ரசிகர்கள் #priyankaadultfilmactress என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரியங்கா சாஹர்
ஏகப்பட்ட ஆபாச படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான சன்னி லியோன் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றதன் பின்னர் தான் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாகவே மாறினார். இந்நிலையில், இந்த சீசனில் கவர்ச்சி நடிகை பிரியங்கா சாஹர் இடம்பெற்ற போது சர்ச்சையை கிளப்பாத ரசிகர்கள் அவர் கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்த நிலையில், பெரும் பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர்.

டாப்லெஸ் காட்சிகள்
உல்லு வெப்சீரிஸில் மேலாடை இல்லாமலும், ஏகப்பட்ட படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வந்த வெப்சீரிஸ் நடிகை பிரியங்கா சாஹர் இந்த ஆண்டு இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 16ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிப்போட்டியாளராக மாறி உள்ளார். பிப்ரவரி 12ம் தேதியான இன்று அவருக்கு டைட்டில் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பிரியங்கா நடித்த டாப்லெஸ் காட்சிகளின் ஸ்க்ரீன் ஷாட்களை அவரது ஹேட்டர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பெட்ரூம் சீன்கள்
ஆடை அணியாமல் படுக்கையறை காட்சிகளில் பிரியங்கா சாஹர் நடித்த ஸ்க்ரீன் ஷாட்களை போட்டு இவருக்கு எல்லாம் பிக் பாஸ் டைட்டிலை கொடுத்தால், அதன் புனிதம் கெட்டுவிடும் என்கிற ரேஞ்சுக்கு பாலிவுட் பிக் பாஸ் ரசிகர்கள் கம்பு சுத்தி வருகின்றனர். பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் டாப்லெஸ் குயின் உர்ஃபி ஜாவேத் என்பதை மறந்து விட்டு இப்படியொரு டிரெண்டிங்கை பாலிவுட் ரசிகர்கள் செய்து வருகின்றனர் என பிரியங்கா ஆர்மியினர் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சல்மான் கானுக்கு திட்டு
அர்ச்சனா கவுதம், பிரியங்கா சாஹர், எம்சி ஸ்டான், ஷிவ் தாக்கரே மற்றும் ஷாலின் பனோத் உள்ளிட்ட 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக உள்ள நிலையில், பிரியங்கா சாஹருக்கு மட்டும் டைட்டில் கொடுக்கக் கூடாது என பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை ரசிகர்கள் எச்சரித்தும் திட்டியும் வருகின்றனர். கருத்துக் கணிப்புகளில் பிரியங்கா லீடிங்கில் உள்ள நிலையில் தான் இந்த அக்கப்போர் அரங்கேறி வருகிறது என்கின்றனர். இன்று மாலை யாருக்கு டைட்டில் கிடைக்கப் போகுது என வெயிட் பண்ணி பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











