சென்றாயன் கிளம்பிய கையோடு பிக் பாஸ் வீட்டிற்கு பெயர் மாத்தியாச்சுடோய்

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டிற்கு பெயர் மாத்தியாச்சு- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு புதுப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த சென்றாயன் நேற்று வெளியேற்றப்பட்டார். ஐஸ்வர்யாவை தான் வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் பிக் பாஸ் இடையே பிராடுத்தனம் செய்ததால் அப்பாவி சென்றாயன் பாதிக்கப்பட்டார்.

சென்றாயன் கிளம்பிய கையோடு பிக் பாஸ் வீட்டின் பெயர் மாறிவிட்டது.

பிக் பாஸ்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். சென்றாயன் கிளம்பிய கையோடு பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் லேடீஸ் ஹாஸ்டல் என்று பெயர் வைத்துள்ளார் அவர்.

சென்றாயன்

ஒரு மனுஷன் அப்பாவியாக இருந்தால் அவரை இந்த அளவுக்கா ஏமாற்றி விரட்டிவிடுவது என்று சென்றாயன் பற்றி பார்வையாளர்கள் குமுறியுள்ளனர். நடிகர் சதீஷோ தனது ஸ்டைலில் பிக் பாஸை கழுவி ஊத்தியுள்ளார். ஏமாந்தவங்க வெளியே... ஏமாத்தினவங்க உள்ளே...இது ஜெயிலுக்கு ஓகே ஆனால்...? என்று நக்கல் அடித்துள்ளார் அவர்.

வாட்ச்மேன்

பிக் பாஸ் 2 வீடு லேடீஸ் ஹாஸ்டல் என்றால் தாடி பாலாஜி வாட்ச்மேனா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ அவர் தான் வார்டன் என்று கூறியுள்ளனர். தாடி பாலாஜி தற்போதைக்கு வெளியேறுவதாக தெரியவில்லை. அவரை பிறகு பார்க்கலாம், முதலில் ஐஸ்வர்யா வெளியேறுவாரா?

பிக் பாஸ்

ஐஸ்வர்யாவை காப்பாற்றி சென்றாயனை வெளியேற்றியது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இனி பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது இல்லை என்று முடிவுக்கு பலர் வந்துள்ளனர். ஏற்கனவே பலர் பிக் பாஸ் செய்யும் கூத்தை எல்லாம் பார்த்துவிட்டு ப்ரொமோ வீடியோவோடு நிறுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BiggBossLadiesHostel

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X