பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா?

By Siva

Recommended Video

பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஜனனி முதல் வேலையாக என்ன செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஜனனி யாருடனும் வம்பு தும்புக்கு போகாமல் சமத்துப் பிள்ளையாக இருக்கிறார். வர வர அவரின் பங்களிப்பு குறைந்து வருவதாக நேற்று முன்தினம் கமல் ஹாஸன் தெரிவித்தார்.

இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போக முடிவு செய்துவிட்டார் போல.

பரபரப்பு

பரபரப்பு

பிக் பாஸ் வீட்டில் ஜனனியால் தற்போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. டாஸ்கின் போதும் யாருடனும் அவர் மல்லுக்குப் பாயவில்லை. மும்தாஜின் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் பிக் பாஸ் வீட்டில் குணச்சத்திர கதாபாத்திரமாக உள்ளார். வெஷ பாட்டில் என்று பெயர் எடுத்த அவரால் பிக் பாஸ் வீட்டில் ஒரு சர்ச்சையும் வெடிக்கவில்லை.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருமே மன அழுத்தத்தில் உள்ளனர். 24 மணிநேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். அவர்கள் சண்டை போடுவதை ஒரு மணிநேரம் பார்ப்பதற்கே நம்மால் முடியவில்லை. அப்படி இருக்கும்போது அந்த சண்டைக்கு மத்தியில் வசித்து வரும் அவர்களுக்கு எப்படி இருக்கும். பணம், புகழுக்காக தான் வந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.

வெளிநாடு

வெளிநாடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு ஜனனி தனது தங்கையை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லப் போகிறாராம். இதை அவரின் தங்கையே தெரிவித்துள்ளார். பாவம் நிகழ்ச்சியால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க இந்த சுற்றுலா நிச்சயம் கை கொடுக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனியின் மார்க்கெட் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமா

மாமா

ஜனனியின் தாய் மாமா அண்மையில் காலமானார். இது பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஜனனிக்கு தெரியாது. தெரிந்தால் உடனே பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியே வந்த பிறகு தனது வீட்டில் நடந்த சோகம் குறித்து அறிந்து ஜனனி எப்படி எல்லாம் வேதனைப்படப் போகிறாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X