கமல் சொன்னதை பிக் பாஸ் ஏற்றுக் கொள்வாரா?

ஐஸ்வர்யாவை நாமினேட் செய்வதாக கமல் அறிவித்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக கமல் போட்டியாளர் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்துள்ளார்.

பாலாஜி மீது குப்பையைக் கொட்டியபோது கூட ஐஸ்வர்யா மீது இவ்வளவு கோபப்படவில்லை கமல். ஆனால், அவர் செண்ட்ராயனை ஏமாற்றி தனது டாஸ்க்கை முடித்துக் கொண்டதற்காக இந்த வாரம் தாளித்து எடுத்து விட்டார்.

அதோடு தனது விருப்பமான போட்டியாளர் செண்டு வெளியேற ஐஸ்வர்யா தான் முக்கியக் காரணம் என்பதும் அவரது கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்.

தப்பித்த ஐஸ்வர்யா:

தப்பித்த ஐஸ்வர்யா:

கடந்த முறை ரித்விகா மற்றும் ஜனனி கூறியது போல், ஐஸ்வர்யா நாமினேசனுக்கு சென்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து வந்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஐஸ்வர்யாவை மக்கள் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் வாரம் அவர் வெளியேற்றப்படலாம்.

கமலின் அறிவிப்பு;

கமலின் அறிவிப்பு;

இந்நிலையில், ஐஸ்வர்யாவை அடுத்த வாரத்திற்கு நேரடியாக கமலே நாமினேட் செய்துள்ளார். இதுவரை பிக் பாஸ் மற்றும் போட்டியாளர்கள் மட்டுமே சக போட்டியாளர்களை நாமினேட் செய்து வந்தனர். அவ்வாறு நாமினேட் செய்யப்படுபவர்களில் தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றும் வாக்குரிமை மட்டுமே மக்களுக்கு உள்ளது.

மீண்டும் ஐஸ்வர்யா:

மீண்டும் ஐஸ்வர்யா:

ஆனால், இவற்றில் இருந்து வேறுபட்டு நேற்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யாவைத் தான் நேரடியாக நாமினேட் செய்வதாக அறிவித்தார் கமல். இதன் மூலம் அடுத்த வார நாமினேசனுக்கு ரித்விகாவுடன், ஐஸ்வர்யாவும் சேர்ந்துள்ளார்.

இப்படியும் இருக்கலாம்:

இப்படியும் இருக்கலாம்:

ஐஸ்வர்யா மீதிருந்த கோபத்தில் கமல் இப்படிச் செய்தாரா இல்லை அடுத்த வாரமும் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியாளராக காமிக்க வேண்டும் என்ற பிக் பாஸின் திட்டங்களில் இதுவும் ஒன்றா எனத் தெரியவில்லை. அப்படி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X