மஹத் இப்படி கெட்டப்பெயர் வாங்க சிம்பு தான் காரணமா?

கெட்டப் பெயருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார் மஹத்.

By Jaya Chitra

Recommended Video

மகத்தால் சிம்புவுக்கு வந்த வினை- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கெட்டப் பெயருடன் வெளியேறியுள்ளார் மஹத்.

பிக் பாஸ் வீடு என்பது கத்தி போன்றது. அதனை அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்களா இல்லை கொலை செய்யப் பயன்படுத்துகிறார்களா என்பது போட்டியாளர்களின் கையில் தான் இருக்கிறது.

கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டை நல்லபடியாகப் பயன்படுத்தி, வெளியில் வந்ததும் அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். ஓவியா, ஆரவ், ஹரீஷ், பிந்து மாதவி, ரைசா என இதற்கு உதாரணம் பல.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் தங்களது மோசமானப் பக்கத்தைக் காட்டி இன்றளவும் மக்களிடையே எதிர்ப்பை சந்தித்து வருபவர்களும் உண்டு. இதற்கு யார் யாரெல்லாம் உதாரணம் என நாம் சொல்லாமலேயே மக்களுக்குத் தெரியும்.

சர்ச்சைகள்:

சர்ச்சைகள்:

அந்தவகையில், இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் நல்ல பெயரைச் சம்பாதித்து வருபவர்கள் ரித்விகா, மும்தாஜ் மற்றும் செண்ட்ராயன் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சர்ச்சையிலாவது சிக்கி கெட்டப் பெயரைப் பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் மஹத்தும், பாலாஜியும்.

வெளியேற்றம்:

வெளியேற்றம்:

ஆனால், கிடைத்த அனுபவங்களில் இருந்து பாடம் படித்துக் கொண்ட பாலாஜி தற்போது அமைதி காத்து வருகிறார். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக கெட்டப் பெயரை சம்பாதித்து, இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் மஹத்.

காதல்:

காதல்:

பிக் பாஸ் வீட்டில் அவர் முரட்டுத் தனமாக, கோபமாக நடந்து கொண்டதால் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வைச் சம்பாதித்துள்ளார். யாஷிகாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதலால், அவருக்காக வெளியில் காத்திருந்த காதலையும் அவர் இழந்துள்ளார்.

காணாமல் போன நல்லபெயர்:

காணாமல் போன நல்லபெயர்:

ஆரம்பத்தில் அவர் சமையல் செய்தது உட்பட பல வேலைகளில் அவர் காட்டிய ஈடுபாடு காரணமாக பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பாராட்டுகளை அவர் பெற்றார். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய போது, அந்த நல்ல பெயர் அவரிடம் இல்லை. போட்டியாளர்களிடம் கெட்டப் பெயரை தான் சம்பாதித்திருந்தார்.

சிம்பு தான் காரணம்:

சிம்பு தான் காரணம்:

இந்நிலையில், கடைசியாக பிக் பாஸ் மேடையில் கமலுடன் பேசிய மஹத், தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர முக்கியக் காரணமே நடிகர் சிம்பு தான் எனத் தெரிவித்தார். ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்கு வராவிட்டால் அவர் இந்தளவிற்கு மக்களிடம் வெறுப்பையும், கெட்டப் பெயரையும் சம்பாதித்திருக்க மாட்டார்.

சிம்புவுக்கு கெட்டப் பெயர்:

சிம்புவுக்கு கெட்டப் பெயர்:

அவருக்கு நல்லது செய்வதாக நினைத்து, பிக் பாஸ் வீட்டிற்கு மஹத்தை அனுப்பினார் சிம்பு. ஆனால், நடந்த கதையோ வேறு. அடிக்கடி சிம்பு பெயரை இழுத்து அவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார் மஹத். அதோடு தனக்கு கிடைத்த வாய்ப்பையும் அவர் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X