உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. இது என்ன நியாயம் விஜி?
நாமினேசனின் போது விஜயலட்சுமிக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: நீதி, நேர்மை, நியாயமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு, பிக் பாஸ் வீட்டில் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் விஜயலட்சுமி.
மற்ற வாரங்களில் இருந்து வேறுபட்டு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேசன் வித்தியாசமாக நடந்துள்ளது. நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அந்தவகையில், விஜயலட்சுமி ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் செண்ட்ராயன் உள்ளிட்டோரை நாமினேட் செய்வதற்காக தனியறைக்கு அழைத்துச் சென்றுப் பேசினார்.

ராணி மகாராணி:
அப்போது விஜயலட்சுமிக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் மட்டுமே ஆன விஜயலட்சுமி தன்னை தவறாக புரிந்து கொண்டதாக ஐஸ்வர்யா கூறினார். ஆனால், ஐஸ்வர்யாவைப் புரிந்து கொள்ள தனக்கு, ‘ராணி மகாராணி' டாஸ்க் மட்டுமே போதும் என பதிலுக்கு வாதிட்டார் விஜயலட்சுமி.

ஐஸ் விளக்கம்:
அதற்கு தன் பக்க விளக்கத்தை அளிக்க முற்பட்டார் ஐஸ். அதாவது, ‘பிக் பாஸ் கன்பெக்சன் ரூமில் தனக்கு அளித்த விதிமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரியாது. அது என்னுடைய டாஸ்க்' என தன் தரப்பு நியாயத்தை விளக்கினார் அவர்.

பதில் வாதம்:
ஆனால், இது எதையும் தன் காதில் போட்டுக் கொள்ளவில்லை விஜயலட்சுமி. ‘இது தனக்கு அளிக்கப்பட்ட டாஸ்க், எனவே கட்டாயம் உங்களைப் பற்றிய குற்றச்சாட்டு ஒன்றைக் கூற வேண்டும்' என்றார் விஜயலட்சுமி.

புரிந்து கொள்ளாத விஜி:
இதையேத் தான் ஐஸ்வர்யாவும் சொன்னார். ‘சர்வாதிகாரி வேடம் தனக்கு அளிக்கப்பட்ட டாஸ்க். எனவே, அவ்வாறு நடந்து கொண்டேன்' என ஐஸ்வர்யா சொன்னதைப் புரிந்து கொள்ளாத விஜயலட்சுமி, தனக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்கை மட்டும் சரியாக செய்ய வேண்டும் என நினைக்கிறார். இது தான், ‘உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா' மொமண்ட்.


Click it and Unblock the Notifications











