பிக் பாஸ் வீட்டில் வில்லத்தனமாக நடந்து கொள்ளும் ‘வைல்ட் கார்ட்’!

பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் ஆகியுள்ளார் யாஷிகா.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் மூலம் புதிய போட்டியாளராகியுள்ள விஜயலட்சுமி வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்துக் கொண்டு வில்லத்தனமாக நடந்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி.

பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த வார எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள ஜனனி, பாலாஜி மற்றும் டேனி தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கு நடுவராக பாலாஜி இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

பந்து பொருக்கிகள்:

பந்து பொருக்கிகள்:

ஒவ்வொரு வாரமும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு பிக் பாஸ் ரூம் போட்டு யோசிப்பாரோ என்னவோ, விதவிதமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், இம்முறை வேட்பாளர்கள் அனைவரையும் பந்து பொருக்கிகள் ஆக்கினார் பிக் பாஸ்.

 ஆவேசமான பந்து வீச்சு:

ஆவேசமான பந்து வீச்சு:

பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து பந்துகளை ஆவேசமாக வீசினார்கள். என்னடா விளையாடறீங்க நீங்க என ஆவேசமாக கற்களை வீசித் தாக்குவது போல் இருந்தது பந்து வீச்சு. சளைக்காமல் பந்துகளைப் பொருக்கினர் போட்டியாளர்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து பந்துகளை ஆவேசமாக வீசினார்கள். என்னடா விளையாடறீங்க நீங்க என ஆவேசமாக கற்களை வீசித் தாக்குவது போல் இருந்தது பந்து வீச்சு. சளைக்காமல் பந்துகளைப் பொருக்கினர் போட்டியாளர்கள்.

 தோளில் கூடை:

தோளில் கூடை:

தேயிலை பறிப்பவர்கள் போல், போட்டியாளர்களுக்கு ஒரு கூடை வழங்கப்பட்டிருந்தது. பொருக்கிய பந்துகளை அதில் போட வேண்டும். ஒவ்வொரு பந்தைப் பொருக்க குனியும் போதும், கூடையில் இருந்தும் பந்துகள் கீழே உருண்டு ஓடியது.

 விதிமுறையை மீறிய செண்டு:

விதிமுறையை மீறிய செண்டு:

இது ஒருபுறம் இருக்க, சில பந்துகள் நீச்சல் குளத்தில் விழுந்தது. அதனை எடுப்பதற்காக தனது கூடையைக் கழட்டி வைத்து விட்டு, நீச்சல் குளத்தில் இறங்கி விதிமுறையை மீறினார் செண்ட்ராயன். ஆனால் போட்டி முடிவடைந்த பிறகும் தான் விதிமுறையை மீறியதை அவர் உணரவே இல்லை என்பது வேறு கதை.

 புது ஐடியா:

புது ஐடியா:

எப்படியும் இம்முறை தலைவி ஆகியே தீருவது என ஓடி ஓடி பந்துகளைப் பொருக்கிக் கொண்டிருந்தார் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் வந்த விஜய லட்சுமி. புத்திசாலித்தனமாக மற்றவர்கள் யோசிப்பதற்கு முன், நீச்சல்குளத்தை சுத்தம் செய்யும் வலை மூலம், அதில் விழுந்த பந்துகளைப் பொருக்கி எடுத்தார்.

 விஜி வழியில்:

விஜி வழியில்:

அட இந்த ஐடியா தனக்குத் தெரியாமல் போய் விட்டதே என மற்ற போட்டியாளர்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அடுத்தமுறை பந்து வீச்சு முடிந்ததும், யாஷிகாவும், ஐஸுவும் விஜி வழியில் நீச்சல்குளத்தில் விழுந்த பந்துகளை எடுக்க முற்பட்டனர்.

 சதி:

சதி:

உடனே பாய்ந்து சென்ற விஜி, நீச்சல் குளத்தை சுத்தம் செய்யும் வலையை நீருக்குள் தள்ளி விட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, இது ஒரு விதமான திட்டம் எனப் பதிலளித்தார். பின்னர் வேறு ஒரு குச்சி மூலம் அந்தக் குச்சியை யாஷிகாவும், ஐஸும் வெளியில் எடுத்தனர்.

 புதிய தலைவி:

புதிய தலைவி:

போட்டியின் முடிவில் சில பந்துகள் வித்தியாசத்தில் விஜியை தோற்கடித்து வெற்றியாளரானார் யாஷிகா. எவ்வளவோ வில்லத்தனம் செய்தும் விஜியால் ஜெயிக்க இயலவில்லை. அதனால் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவியானார் யாஷிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X