பிக் பாஸ் 3யில் சர்ச்சை நாயகி.. அப்போ அடிக்கடி ‘பீப் பீப்’ சவுண்ட் கன்பார்ம் மக்களே!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Big Boss season 3: பிக் பாஸ் 3 யின் நடிகை நடிகர்கள் பட்டியல்

சென்னை: பிக் பாஸ் சீசன் 3யில் நடிகை ஸ்ரீரெட்டி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இம்மாதம் 23ம் தேதி விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறார்.

எப்போதுமே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளன்று தான் அதன் போட்டியாளர்கள் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னர், இவர் தான் போட்டியாளர் என பலரது பெயர் இந்த பட்டியலில் அடிபடுவது வழக்கம் தான்.

ஜாங்கிரி மதுமிதா:

ஜாங்கிரி மதுமிதா:

அந்தவகையில் இந்தாண்டும் பல திரையுலகப் பிரபலங்களின் பெயர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் என இணையத்தில் உலா வருகின்றன. சிலர் அவற்றிற்கு மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஜாங்கிரி மதுமிதா போட்டியாளர் என்பது மட்டும் ஏறக்குறைய உண்மையாகி விட்டது.

ஸ்ரீரெட்டியிடம் பேச்சுவார்த்தை:

ஸ்ரீரெட்டியிடம் பேச்சுவார்த்தை:

இதேபோல், பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் உலா வருகிறது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

பேஸ்புக் பதிவு:

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை ஸ்ரீரெட்டியும் மறைமுகமாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர், ‘பிக் பாஸ் தமிழ் அல்லது தெலுங்கில் நான் கலந்து கொள்ள வேண்டும்' என விரும்புபவர்கள் யார்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரசிகர்கள் விருப்பம்:

ரசிகர்கள் விருப்பம்:

இதற்கு அவரது ரசிகர்கள் பலர், ‘தமிழில் கலந்து கொள்ள வேண்டும்' என தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அப்படியானால், எனக்கு சக போட்டியாளர்களாக தான் பாலியல் புகார் கூறியவர்களும் வர வேண்டும் எனப் பதிலளித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

பீப் சத்தம்:

பீப் சத்தம்:

அதோடு, தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் நிச்சயம் சென்சார் நிறைய தேவைப்படும். அதோடு, அடிக்கடி பீப் சத்தமும் கேட்க வேண்டி வரும் என அவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். படவாய்ப்புக்காக தன்னைப் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

டி ஆர் பி எகிறும்:

டி ஆர் பி எகிறும்:

அதோடு, தனது சமூகவலைதளப் பக்கங்களில் அடிக்கடி ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. எனவே, அவர் பிக் பாஸ் வீட்டிற்குப் போனால் நிச்சயம் டி ஆர் பி எகிறும் என சம்பந்தப்பட்ட சேனல் கணக்குப் போடுகிறது போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X