“சத்தியமா என்னால அப்டி ஆட முடியாதுப்பா”.. பிக் பாஸுக்கு நோ சொன்ன விசித்ரா

தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என விசித்ரா தெரிவித்துள்ளார்.

By Staff

Recommended Video

Big Boss 3 Contestants: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்து கொள்கிறாராம்- வீடியோ

சென்னை: தான் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை விசித்ரா.

அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்றே இதற்கும் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. நிகழ்ச்சிக்கான புரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது.

இம்முறை யார்யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என ஆளாளுக்கு ஒரு பட்டியலை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டு வருகின்றனர்.

மீண்டும் விசித்ரா:

மீண்டும் விசித்ரா:

இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் ஊடகங்களில் நடிகை விசித்ரா பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை விசித்ரா மீண்டும் பட வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியுள்ளார்.

விளக்கம்:

விளக்கம்:

இதனால் அவரும் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ள இருக்கிறார் என ஒரு தகவல் இணையத்தில் பரவியது. ஆனால், அந்த வதந்தி விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னதாகவே, அதற்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்து விட்டார் விசித்ரா. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

என்னால் முடியாது:

அதில், "உலகத்தின் முன்பு பல் துலக்குவதும், தூங்கி வீங்கிய முகத்துடன் படுக்கையில் இருந்து எழுந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடுவதும், அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்க்குகளை செய்வதும், என்னுடைய நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் நானல்லாத வேறொரு பிம்பத்தை என்னால் பிரதிபலிக்க முடியாது" என அவர் கூறியுள்ளார்.

ஜாங்கிரி மதுமிதா:

ஜாங்கிரி மதுமிதா:

ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகை மதுமிதா கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இதை நிகழ்ச்சிக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மதுமிதாவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. எனவே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை:

பேச்சுவார்த்தை:

நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளிடம் தொலைக்காட்சி நிர்வாகம் மும்முரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறம் இருக்க, பலர் தாமாகவே முன்வந்து நிகழ்ச்சியில் பங்கேற்க நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X