Bigg Boss 3 பொம்பள காசுல தான் சாப்பிட்டேன்: சித்தப்பு சரவணன் கண்ணீர்
Recommended Video
சென்னை: மீரா மிதுனை அடுத்து சித்தப்பு சரவணன் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இன்று அழுகாச்சி தான் கான்செப்ட் போன்று. முதலில் மீரா மிதுன் பாத்திமா பாபு அருகே அமர்ந்து அழுது கொண்டே பேசியது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியானது.
இந்நிலையில் நடிகர் சரவணன் கண்ணீர் விடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சரவணன்
என் முதல் மனைவி தான் இரண்டாவது மனைவிக்கு தாலி, சேலை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். குழந்தைக்காக தான் இந்த கல்யாணம் என்று சொன்னார். யாருமே விட்டுக் கொடுக்க மாட்டாங்க, என் மனைவி விட்டுக் கொடுத்தார். அவள் தான் எல்லாம் கொடுத்தாள். பொம்பள காசுல தான் வாங்கி சாப்பிட்டேன். பையனுக்காக ஒரு வாழ்க்கை, செகண்ட் ஹாஃப் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சரவணன் அழுது கொண்டே பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சரவணன் அழுவதை பார்த்து சக போட்டியாளர்களும் கண் கலங்குகிறார்கள்.
கண்ணீர்
சரவணன் தனது முதல் மனைவி செய்த தியாகத்தை நினைத்து அழுததை பார்த்த ரசிகர்களுக்கும் லைட்டா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. அழாதீங்க சித்தப்பு, இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை தங்களின் சொந்த பிரச்சனைகளை கேமராவுக்கு முன்பு கூற வைத்து அவர்களையும் அழ வைத்து, சக போட்டியாளர்களையும் அழ வைத்து, பார்ப்பவர்களையும் ஃபீல் பண்ண வைக்கும் இந்த டாஸ்க் தேவையில்லாதது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டிஆர்பிக்காக அவர்களின் சொந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பிரச்சனை
போட்டியாளர்கள் பெரிய அளவில் சண்டை போடுவார்கள் என்று பிக் பாஸ் எதிர்பார்த்தால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. இதையடுத்தே போட்டியாளர்களை அழ வைத்து அப்படியாவது சண்டை வருகிறதா என்று பார்க்கிறார் பிக் பாஸ் என நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











