twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் 3 : நிகழ்ச்சியே ஆரம்பிக்கல்ல.. அதுக்குள்ள கச்சேரியை ஆரம்பிச்சுட்டாங்களே!

    பிக் பாஸ் 3க்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    By Staff
    |

    Recommended Video

    பிக் பாஸ் 3 வரும் 23 ஆம் தேதி 8 மணியில் இருந்து உங்கள் வீட்டில் | Bigg boss season 3

    சென்னை: பிக் பாஸ் சீசன் 3க்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். ஒரே வீட்டில் 15 பிரபலங்கள் 100 நாட்கள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.

    வீட்டில் இருப்பவர்களிடமும், மக்களிடம் அதிக ஆதரவைப் பெறாத போட்டியாளர்கள் வாரம் ஒருவராக வெளியேற்றப்படுவர்.

    பிக் பாஸ் சலசலப்பு:

    பிக் பாஸ் சலசலப்பு:

    இதற்கிடையே பல்வேறு குணாம்சங்களுடன் ஒரே வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மோதிக் கொள்வதும், காதலில் விழுவதும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமயங்களில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளும் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.

    சர்ச்சை:

    சர்ச்சை:

    எனவே, முதல் சீசனில் இருந்தே இந்நிகழ்ச்சிக்கு தடை கேட்டு பல்வேறு அமைப்பினர் வழக்குத் தொடுத்தும், கண்டனம் தெரிவித்தும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஆனால், அந்த எதிர்ப்புகளே நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரமாகி விடுவதால், அதன் டிஆர்பி ஏறிக் கொண்டு தான் போகிறது. எனவே, ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைக்குப் பேர் போனவர்களாக தேர்வு செய்து போட்டியாளர்களாக்கி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பு.

    பிக் பாஸ் போட்டியாளர்கள்:

    பிக் பாஸ் போட்டியாளர்கள்:

    அந்தவகையில் இம்முறையும் சர்ச்சைக்கும், சண்டைக்கும் பேர் போன பலர் பிக் பாஸ் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இம்முறை கடந்த இரண்டு சீசன்களைக் காட்டிலும் கச்சேரி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தடை கேட்டு வழக்கு:

    தடை கேட்டு வழக்கு:

    இந்நிலையில், இன்னும் நிகழ்ச்சி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், புதிய பிரச்சினை ஒன்று முளைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

    தணிக்கை தேவை:

    தணிக்கை தேவை:

    அதில் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், பார்வையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனம் உள்ளதாக சுதன் குறிப்பிட்டுள்ளார். எனவே, தணிக்கை செய்தபின் அந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி 23ம் தேதி ஒளிபரப்பாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    A case has been filed in the Madras High Court by one advocate by the name, Sudhan who has sought a ban on the upcoming reality show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X