தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா?

By Siva

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ரேஷ்மா தல 60 படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் 3 வீட்டில் முதல் முறை நாமினேட் செய்தபோதே வெளியேற்றப்பட்டவர் ரேஷ்மா. அத்தை நீ செத்த என்று கூறி முகென் ராவ் விளையாட்டுக்காக ரேஷ்மாவை நாமினேட் செய்தார். ஆனால் பிக் பாஸுக்கு ரேஷ்மா மீது என்ன கோபமோ, நாமினேட் ஆன கையோடு அவரை பேக் செய்துவிட்டார்.

Bigg Boss 3 fame Reshma to act in Thala 60?

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தல 60 படக்குழு இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

நேர்கொண்ட பார்வையை போன்றே தல 60 படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை படம் வெளியான 10 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளதாம்.

நேர்கொண்ட பார்வை போன்று தல 60 படம் ரீமேக் இல்லை. அஜித்துக்காகவே வினோத் எழுதி வைத்துள்ள கதை. படத்தின் பூஜை வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடிப்பது மட்டுமே தெரியும். மற்ற கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல 60 படத்தில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தன் மகள் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் ஆசை ஆகும். தல 60 படத்திற்கு பூஜை போட்டவுடன் தலைப்பை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தின் தலைப்பை படப்பிடிப்பு துவங்கிய உடனேயே அறிவிக்க அஜித் தான் காரணமாம். தல 59 என்று யாரும் கூற வேண்டாம், தலைப்பை உடனே அறிவித்துவிடலாம் என்று அஜித் கூறினாராம். அதனால் தல 60 பட தலைப்பும் விரைவில் வெளியாகிவிடும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X