பிக் பாஸ் 3: ரசிகர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிட்டது

By Siva

Recommended Video

Big Boss 3 Contestants: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்து கொள்கிறாராம்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் ரசிகர்கள் எது நடக்கக் கூடாது என்று பயந்தார்களோ அது நடக்கத் துவங்கிவிட்டது.

பிக் பாஸ் 3 சீசன் விரைவில் துவங்க உள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்று இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கப் போகிறார். போட்டியாளர்களை விட கமல் என்ன அரசியல் பேசப் போகிறாரோ என்பதை பார்க்கும் ஆவல் தான் அதிகம் உள்ளது.

கோட்சே விவகாரம் கொழுந்து விட்டு எரியும் நிலையில் கமல் பிக் பாஸில் என்ன பன்ச் விடப் போகிறாரோ தெரியவில்லை.

மதுமிதா

மதுமிதா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகை ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. பிரேம்ஜி, ராதாரவி ஆகியோரும் கலந்து கொள்ளக்கூடும் என்று பேசப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி யார் பெயராவது அடிபடுவதும், அவர்கள் மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. அதிகாரப்பூர்வ பட்டியல் வரும் வரை காத்திருப்போம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஜய் டிவி பிரபலங்களை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றர். முடியலடா சாமி, உங்க ஆளுங்கள மட்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பாதீங்க என்றனர். இந்நிலையில் அவர்கள் பயந்தது போன்று தான் நடந்துள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

முதல் போட்டியாளரான மதுமிதாவே விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் பிரபலமானவர் தான். முதல் ஆளே விஜய் டிவி பிரபலமா, சரி எடுத்தது எடுத்தாச்சு மற்றவர்களையாவது வேறு எங்கிருந்தாவது அழைத்து வரவும் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த சீசன் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பார்க்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி

ரஜினி

இதில் ஒரு கும்பல் ஐஸ்வர்யா, யாஷிகா மாதிரி ஆட்களை தயவு செய்து அழைத்து வந்து எங்களை லூசாக்க வேண்டாம் என்கிறார்கள். சமூக வலைதளங்கள் பக்கம் போனாலே பிக் பாஸ் கதறலாக உள்ளது. சிலரோ கமலுக்கு பதில் ரஜினியை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு ரஜினி ஒத்துக்கணும்ல கண்ணுகளா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X